Infinix HOT 10i | மீடியாடெக் ஹீலியோ P65 சிப்செட் உடன் அதிகாரப்பூர்வ அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

Author: Dhivagar
10 September 2021, 1:22 pm
Infinix HOT 10i, with MediaTek Helio P65 chipset, goes official
Quick Share

இன்ஃபினிக்ஸ் தனது சமீபத்திய பட்ஜெட்-ரேஞ்ச் HOT-சீரிஸ் ஸ்மார்ட்போனான, HOT 10i ஸ்மார்ட்போனை பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கைபேசியின் விலை PHP 5,990 (சுமார் ரூ.8,800) ஆகும் மற்றும் நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

இதன் முக்கிய சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இந்த சாதனம் HD+ டிஸ்பிளே, இரட்டை பின்புற கேமராக்கள், மீடியாடெக் ஹீலியோ P65 செயலி மற்றும் 6,000mAh பேட்டரி ஆகியவற்றுடன் கிடைக்கும்.

இன்ஃபினிக்ஸ் HOT 10i ஒரு முக்கிய கீழ்புற பெசல் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், இரட்டை கேமரா யூனிட் மற்றும் பாதுகாப்பான பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான கைரேகை ரீடர் அம்சத்தைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.52-இன்ச் HD+ (720×1600 பிக்சல்கள்) TFT LCD திரையை ஒரு நிலையான 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் HOT 10i ஒரு இரட்டை பின்புற கேமரா யூனிட் உடன் 13MP முதன்மை சென்சார் கொண்டது, இது QVGA லென்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு, இது 5MP முன் எதிர்கொள்ளும் ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் HOT 10i மீடியாடெக் ஹீலியோ P65 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது, இதில் 4 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உடன் உள்ளது.

ஹூட்டின் கீழ், இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான XOS 7.5 இல் இயங்குகிறது மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இணைப்பிற்கு, சாதனம் டூயல்-பேன்ட் Wi-Fi, ப்ளூடூத், ஒரு ஹெட்போன் ஜேக் மற்றும் ஒரு மைக்ரோ-USB போர்ட்டுக்கான ஆதரவை கொண்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் HOT 10i போனின் ஒரேயொரு 4GB/128GB மாடலுக்கு PHP 5,990 (தோராயமாக ரூ.8,800) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது பிலிப்பைன்ஸில் இ-காமர்ஸ் இணையதளமான Shopee.com வழியாக PHP 5,490 (சுமார் ரூ.8,000) தள்ளுபடி விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

Views: - 257

0

0