இந்தியா மற்றும் பிற நாடுகளில் திடீரென செயலிழந்தது இன்ஸ்டாகிராம்?! பயனர்கள் தவிப்பு! | Instagram Down

Author: Dhivagar
2 September 2021, 2:48 pm
Instagram Down in India and Other Countries
Quick Share

இந்தியா மற்றும் ஆசியாவின் பிற நாடுகளில் உள்ள பல பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலிழந்ததாக புகார்கள் எழுந்துள்ளது. நிகழ்நேர செயலிழப்பு கண்காணிப்பாளரான டவுன்டிடெக்டரின் தகவலின்படி, பேஸ்புக்கிற்கு சொந்தமான தளம் இன்று காலை 11 AM IST மணியளவில் பலருக்கு சரியாக செயல்படாமல் போனது. 

3,000 க்கும் மேற்பட்ட புகார்கள் IST 12:30 மணிக்கு வரத் தொடங்கியது. இதையடுத்து செயலிழப்பு கண்காணிப்பு தலமான டவுன்டிடெக்டர், பயன்பாட்டில் அதிகபட்ச பயனர்கள் (47 சதவிகிதம்) இதுபோன்ற பிழைகளை எதிர்கொண்டதாக கண்டறிந்துள்ளது, அதே நேரத்தில் 27 சதவிகித பயனர்கள் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தையும் அணுக முடியாமல் போனது. டவுன்டிடெக்டர் தகவலின்படி, மேலும் சில பயனர்கள் சர்வர் கனெக்ஷனில்  சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த சிக்கலை தீர்க்கவில்லை, இது குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. 

டவுன்டெக்டர் தகவலின்படி டில்லி, மும்பை, அகமதாபாத் மற்றும் பெங்களூருவில் உள்ள பயனர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

எப்போதும்போல, பல இன்ஸ்டாகிராம் பயனர்கள் ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களில் இந்த செயலிழப்பு குறித்து புகார் அளித்தனர். பயன்பாட்டை refresh செய்ய முடியவில்லை என்று சில ட்வீட்களில் குறிப்பிடப்பட்டிருந்தது, மேலும் சில பயனர்கள் Direct Message அம்சத்தில் சிக்கல்களை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது. 

பல பயனர்கள் ட்வீட்களின் அடிப்படையில் ஸ்டோரீஸ் மற்றும் போஸ்ட்களும் சரியாக இயங்காமல் போனது. இன்ஸ்டாகிராமின் இந்த செயலிழப்பு iOS மற்றும் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் இருவரையுமே பாதித்துள்ளதாக தெரிகிறது. 

பேஸ்புக் மற்றும் அதன் துணை நிறுவனங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் இந்த ஆண்டில் மட்டுமே பலமுறை உலகளவில் செயலிழப்புகளை எதிர்கொண்டுள்ளன. 

இந்த இன்ஸ்டாகிராம் செயலிழப்பு பிரச்சினை எதனால் ஏற்பட்டது, இது எப்போது எல்லோருக்கும் சரியாகும் என்பதை சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Views: - 362

0

0