இனிமேல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பயன்படுத்துவது ரொம்ப ரொம்ப ஈஸி!
5 September 2020, 7:15 pmஇன்ஸ்டாகிராம் செயலி டிக்டாக் போன்ற அம்சமான ரீல்ஸ் அம்சத்தை ஒரு பிரத்யேக டேப் உடன் அறிமுகம் செய்துள்ளது. டிக்டாக் தடைக்குப் பின்னர் குறுகிய வீடியோ பதிவேற்றும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியது. முன்னதாக, பயனர்கள் எக்ஸ்ப்ளோர் அல்லது டிஸ்கவரி பிரிவில் இருந்து தான் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்க்க வேண்டியிருந்தது.
ஆனால் இப்போது புதிய Reels தாவல் தேடல் பிரிவின் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் தேடல் பிரிவு ‘மெசேஜ்’ ஐகானுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் Reels அம்சம் இப்போது நன்கு பிரபலம் அடைந்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் கடந்த மாதம் முதலே இந்த புதிய வடிவமைப்பைப் பரிசோதித்து வருகிறது, இது இறுதியாக செப்டம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் ஆனது. பயனர்கள் இப்போது புதிய ரீல்ஸ் பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் வெவ்வேறு ரீல்களைக் காணலாம் மற்றும் பிற ரீல்களைப் பார்க்க கீழே ஸ்வைப் செய்யலாம்.
இன்ஸ்டாகிராம் எக்ஸ்ப்ளோர் தாவலை Reels தாவலுடன் மாற்றிய பிறகு பலர் சிறிய சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், புதிய வடிவமைப்பு ரீல்ஸ் அம்சத்திற்கான தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, இந்த தனி பிரிவில் ரீல்ஸ் வீடியோக்களை மட்டுமே காண முடியும். அந்த பிரிவில் இனி IGTV மற்றும் சாதாரண வீடியோக்கள் இருக்காது.
ஆடியோ மற்றும் பல்வேறு ஃபில்டர்களுடன் 15 விநாடி வீடியோக்களை பதிவேற்ற மற்றும் திருத்த பயனர்களுக்கு ரீல்ஸ் உதவுகிறது. பயனர்கள் ஒரு குறிப்பிட்ட கணக்கிலிருந்து ரீலைப் பார்க்க விரும்பினால், அவர்கள் தங்கள் கணக்கிற்குச் சென்று IGTV விருப்பத்திற்கு அடுத்துள்ள ரீல் பிரிவில் இருந்து பார்க்கலாம். எந்த ரீல் வீடியோக்களையும் உருவாக்கும்போது, வேடிக்கையான ஆடியோ, AR விளைவுகள் போன்ற பலவிதமான எடிட்டிங் அம்சங்களையும் பயன்படுத்தலாம். ரீல்ஸ் வீடியோக்களைப் பகிர்வதற்கு, வழக்கமான கதையைப் பகிர்வது போன்ற செயல்முறையையே பின்பற்றலாம்.
0
0