அடிக்கடி இன்ஸ்டாகிராமில் படங்கள் மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!!!

Author: Hemalatha Ramkumar
21 October 2021, 2:23 pm
Quick Share

இன்ஸ்டாகிராம் வெப் பதிப்பைப் பயன்படுத்தி புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடும் திறனை இறுதியாக நமக்கு கிடைத்து விட்டது. Engadgetஆல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அம்சம் இப்போது உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்த அம்சம் தங்கள் கணினியில் புகைப்படங்களை எடிட் செய்து அப்லோடு செய்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இனி உங்கள் படங்களை உங்கள் ஸ்மார்ட்போனுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. அவற்றை உங்கள் கணினியிலிருந்து நேரடியாக இன்ஸ்டாகிராமில் எளிதாக அப்லோடு செய்யலாம். இதற்கு முன் இன்ஸ்டாகிராம் பயனர்களை வெப் பதிப்பில் ஃபீட்களை மட்டுமே பார்க்க அனுமதித்தது. இது தவிர, உங்கள் அனைத்து இன்ஸ்டாகிராம் மெசேஜ்களையும் உங்கள் கணினியிலிருந்தும் அணுகலாம்.

பல வருடங்களாக இது ஒரு போன் App ஆக மட்டுமே இருந்தது. மேலும் பேஸ்புக்கிற்கு சொந்தமான நிறுவனம் இப்போது பயனர்களுக்கு இந்த App யை பயன்படுத்த பல காரணங்களை வழங்குகிறது. நீங்கள் வெப் பிரவுசரில் வெறுமனே Instagram ஐ தேடலாம், பின்னர் உள்நுழைந்து “+” ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கண்டன்ட்டை அப்லோடு செய்யத் தொடங்கலாம்.

மேலும், மொபைல் பயனர்களுக்காகவும் நிறுவனம் சில அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Collabs test அம்சம் உள்ளது. இது போஸ்ட் மற்றும் ரீல்களை இரண்டு நபர்களை கோ ஆத்தர் செய்ய அனுமதிக்கிறது. இதற்காக, ஒரு நபரை ஈடுபடுத்த டேக்கிங் திரையில் (Tagging screen) இருந்து இன்னொருவரை அழைக்க வேண்டும்.

இந்த வழியில், இரு பயனர்களின் ஃபாலோவர்பவர்களும் அந்த இடுகையைப் பார்க்க முடியும். இந்த அம்சம் ஃபாலோவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

Views: - 343

0

0