இன்ஸ்டன்ட் காபி போல இன்ஸ்டன்ட் அரிசி… அசாம் மாநிலத்தின் புது விதமான அரிசி!!!

20 January 2021, 9:23 pm
Quick Share

போகா சவுல் அரிசி பற்றி நீங்கள் கேள்விபட்டுள்ளீர்களா…??? இது வடகிழக்கு பகுதியை சேர்ந்த ஒரு உணவு வகையாகும். அசாம் மாநிலத்தில் மறைந்திருக்கும் பல இரகசியங்களில் போகா சவுல் அரிசியும் ஒன்று.  அசாமியில் போகா என்பதற்கு மண் என்றும் (மென்மையான), சவுல் என்றால் அரிசி என்றும்  பொருள். இது இன்ஸ்டன்ட் காபி போல ஒரு இன்ஸ்டன்ட் அரிசி. இதனை சமைக்க  தேவையில்லை. ஆச்சரியமாக உள்ளதா… உண்மை தான். இதனை வெறுமனே 15-30 நிமிடங்கள் ஊறவைத்தாலே போதும்.    

போகா சவுல் அரிசிக்கு  பின்னால் உள்ள அறிவியல் உண்மைகள்: 

போகா சவுல் என்பது ஒரு சிறப்பு வகை குளிர்கால அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு  வகை அரிசியாகும். இந்த அரிசியானது அசாம் மாநிலத்தை சேர்ந்த  நல்பரி, பார்பேட்டா, பக்ஸா, கம்ரூப், கோல்பாரா, துப்ரி, கோக்ராஜர், தர்ராங் போன்ற மாவட்டங்களில்  வளர்க்கப்படும் ஒரு வகை ஒட்டும் அரிசி ஆகும். ஒவ்வொரு தானியத்திலும்   அமைலோஸ் மற்றும் அமைலோபெக்டின் என்ற இரு ஸ்டார்ச் கூறுகள் உள்ளன. அமிலோஸ் அரிசியின் கடினத்தன்மைக்கு பங்களிக்கிறது. வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது இந்த அரிசி ஆரோக்கியமானது.   

போகா சால் அறுவடை செய்யப்பட்டு பாரம்பரிய நெல் வைக்கோல் மற்றும் டோபா எனப்படும் மூங்கில் கருவிகள், மண் ஜாடிகள், சணல் சாக்குகள் அல்லது துலி எனப்படும் மூங்கில் கூடைகளில் சேமிக்கப்படுகிறது. பின்னர் அது நீக்கப்பட்டு ஒரே இரவில் ஊறவைக்கப்படுகிறது. அடுத்த நாள் காலையில், இது ஒரு இரும்பு பாத்திரத்தில் 35-80 நிமிடங்கள் கொதிக்க வைக்கப்படுகிறது. 

பின்னர் இதில் உள்ள அதிகப்படியான நீர் வடிகட்டப்பட்டு, அரிசி 6-8 நாட்களுக்கு வெயிலில்  உலர வைக்கப்படுகிறது. அரிசியின் தரத்தை பராமரிக்க, இந்த செயல்முறையை குறைந்தது 24 மணி நேரத்திற்கு மேல் செய்ய வேண்டும். இது சுமார் 3-5 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.   

போகா சவுல் அரிசியை  எவ்வாறு பயன்படுத்தலாம்? 

இந்த அரிசியை மூன்று விதமாக பயன்படுத்தலாம். அரிசியை 10-15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரிலும்,  அறை வெப்பநிலை நீரில் 30 நிமிடங்களுக்கும் அல்லது குளிர்ந்த நீரில் 4-5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இந்த அரிசியை குளிர்ந்த நீரில் ஊற வைக்கும் போது அது  வழக்கமான அளவை விட இரண்டு மடங்காக  அதிகரிக்கும். அதே சமயம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்த அரிசி அதன் அளவை விட மூன்று மடங்கு வரை அதிகரிக்கும். இதற்கென்று  தனித்துவமான சுவை எதுவும் கிடையாது. இது பொதுவாக ஒரு இரவு முழுவதும் குளிர்ந்த நீரில் ஊற வைக்கப்பட்டு பின்னர் கிரீம் அல்லது தயிருடன் சேர்க்கப்படுகிறது. மேலும்  வெல்லம் மற்றும் பழங்களுடன் கலந்து அசாமிய காலை உணவாக சாப்பிடப்படுகிறது.  

போகா சவுல் அரிசியின் சுகாதார நன்மைகள்:   குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, அரிசியில் 10.73% நார்ச்சத்து மற்றும் 6.8% புரதம் உள்ளது. இது  வயிற்றுக்கு குளிர்ச்சி தருகிறது. எனவே, போகா சவுல் அரிசியை குறிப்பாக தெற்கு அசாமின் விவசாயிகள் கோடை மாதங்களில் சாப்பிடுகிறார்கள். இதன் அதிகப்படியான ஊட்டச்சத்து மற்றும் ஆற்றல் காரணமாக  அசாமில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது பெரிதும்  உதவுகிறது. போர் காலங்களில் பாதுகாப்புப் படையினருக்கு உணவு வழங்க இந்த அரிசி பயன்படுத்தப்படுகிறது. இதனை இயற்கை பேரழிவுகள் நேரத்தின் போது நிவாரண ஏற்பாடாக 

 பயன்படுத்தப்படலாம். போகா சவுல் அரிசி  சுற்றுச்சூழல் நட்பு உணவு உற்பத்தியாகவும் பார்க்கப்படுகிறது. எனவே இதனால் சுற்றுசூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. என்ன நண்பர்களே… இந்த அரிசியை டிரை பண்ணி பார்க்க உங்களுக்கு ஆசையாக உள்ளது. சான்ஸ் கிடைச்சா கண்டிப்பா பண்ணுங்க. 

Views: - 6

0

0