ரசிகர்கள் தவமாய் தவமிருக்கும் ஆப்பிள் ஐபோன் 12 வெளியீட்டு நிகழ்வு இந்நாளில் தான்! வெளியானது அறிவிப்பு!

9 September 2020, 8:19 am
iPhone 12 Event for September 15
Quick Share

நீண்டகாலமாக ஐபோன் 12 வெளியீடு தாமதமாகி வருகிறது என்ற அறிக்கைகளையும் வதந்திகளையுமே தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஆப்பிள் ரசிகர்ளுக்கு உற்சாகப்படுத்தும்  வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆமாங்க, நீங்கள் எதிர்பார்ப்பது சரிதான், ஆப்பிள் இறுதியாக ஐபோன் 12 வெளியீட்டு நிகழ்விற்கான தேதியை அறிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பில், அடுத்த தலைமுறை ஐபோன்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி PT நேரப்படி காலை 10 மணிக்கு ஒரு மெய்நிகர் நிகழ்வில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெய்நிகர் நிகழ்வு என்பதால் யார் வேண்டுமானாலும் இந்நிகழ்வையும் மற்றும் நிறுவனம் வெளியிடும் புதிய ஐபோன்களையும் பார்க்கலாம்.

இந்த ஆண்டு, ஆப்பிள் நான்கு புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.4 அங்குல ஐபோன் 12, 6.1 அங்குல ஐபோன் 12, 6.1 அங்குல ஐபோன் 12 ப்ரோ மற்றும் 6.7 அங்குல ஐபோன் 12 புரோ மேக்ஸ் ஆகியவை இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சாதனங்கள் அனைத்தும் 5 ஜி ஆதரவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஐபோன் 12 புரோ மேக்ஸ் மட்டுமே mmWave 5 ஜி திறன்களுடன் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஐபோன் 12 இன் புரோ வகைகளில் ஐபாட் புரோவின் LiDAR சென்சார் தோன்றுவது குறித்தும் பேசப்படுகிறது.

இது தவிர, ஆப்பிள் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 பிளஸையும் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. சீரிஸ் 3 வாட்ச்  விலையில் ஏற்கனவே இருக்கும் வாட்சை மாற்றும் வகையில் நிறுவனம் மற்றொரு ஆப்பிள் வாட்சையும் அறிமுகப்படுத்தும் என்றும் வதந்திகள் உள்ளன. புதிய ஐபோன்களுடன் புதிய ஆப்பிள் டிவி, சிறிய ஹோம் பாட் மற்றும் ஐபாட் ஏர் ஆகியவற்றிற்கான அறிவிப்புகளும் வெளியாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, செப்டம்பர் 15 ஆம் தேதி PT நேரப்படி காலை 10 மணிக்கு அதாவது  இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு வெளியீட்டு நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. 

Views: - 0

0

0