ரூ.69,900 விலையிலான ஐபோன் 12 மினியை ரூ.20000 தள்ளுபடியுடன் வாங்க அறிய வாய்ப்பு
19 January 2021, 6:10 pmகுடியரசு தின விற்பனை பல தயாரிப்புகளில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. ஆப்பிளின் ஐபோன் 12 மினி கடந்த அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இப்போது முதல் முறையாக தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது. இதை வங்கி மற்றும் பரிவர்த்தனை சலுகைகளுடன் ரூ.48,900 விலையில் ஒரு செம்ம சான்ஸ் கிடைச்சிருக்கு. அந்த சலுகைகள் பற்றி பார்ப்போம் வாங்க.
பிரைம் உறுப்பினர்களுக்காக அமேசானின் குடியரசு தின விற்பனை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இது நாளை முதல் அனைவருக்கும் கிடைக்கும். அமேசான் இந்தியாவில், ஐபோன் 12 மினி, ரூ.64,490 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. SBI யின் கிரெடிட் கார்டுடன் கிடைக்கும் ரூ.6,000 சலுகையுடன் இதை இன்னும் குறைவான விலையில் வாங்கலாம் வாங்கலாம். பழைய ஸ்மார்ட்போனைப் பரிமாறிக்கொள்ளும் நுகர்வோர் ரூ.12,400 வரை தள்ளுபடியையும் பெறலாம். இது ஐபோன் 12 மினியின் அடிப்படை 64 ஜிபி மாடலுக்கானது. அமேசான் ஐபோன் 12 மினியின் 128 ஜிபி மாடலிலும் அதே சலுகையைக் கொண்டுள்ளது.
இந்தியா ஐஸ்டோர் ஐபோன் 12 மினி உள்ளிட்ட ஐபோன் 12 தொடர்களிலும் சலுகைகளைக் கொண்டுள்ளது. இங்கே, எச்.டி.எஃப்.சி வங்கி வாடிக்கையாளர்கள் ஐபோன் 12 மினியில், ரூ.6,000 கேஷ்பேக் பெறலாம். இது, ரூ.9,000 வரை பரிமாற்ற சலுகையுடனும், ரூ.3,000 கூடுதல் கேஷ்பேக்குடனும் தொகுக்கப்பட்டுள்ளது. கேஷ்பேக் உடன், ஐபோன் 12 மினிக்கு, ரூ.63,900 செலவாகிறது, மேலும் பரிமாற்ற சலுகைகள் உட்பட இதன் விலை ரூ.48,900 ஆகக் குறையும்.
புதிய சலுகைகள் அமேசானின் வலைத்தளத்திலும், இந்தியா ஐஸ்டோரின் வலைத்தளத்திலும் நேரலையில் உள்ளன.
0
0