1TB ஸ்டோரேஜ் வசதியுடன் ஐபோன் 13? திடீரென மிகப்பெரிய முடிவையெடுத்த ஆப்பிள்?

30 January 2021, 3:24 pm
iPhone 13 rumour 1TB variant limited to 'Pro', notch may get smaller but in an unusual way
Quick Share

சமீபத்தில், சில அறிக்கைகள் ஆப்பிளின் ஐபோன் 13 வரிசையில் 1TB ஸ்டோரேஜ் இருக்கக்கூடும் என்று தகவல்களை வெளியிட்டுள்ளன. ஒரு வேளை இது உண்மையாகுமெனில், 1TB சேமிப்பக பதிப்பில் ஒரு ஐபோன் வெளியாவது இதுவே முதல் முறையாக இருக்கும். 

இப்போதைக்கு, அதிகபட்சமாக 512 ஜிபி உள்ளடிக்கிய ஸ்டோரேஜ் உடன் ஐபோன்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், டிப்ஸ்டர் ஜான் ப்ராஸர் இப்போது 1TB மாறுபாடு ‘புரோ’ மாடல்களுக்கு மட்டுமே வரையறுக்கப்படும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது வதந்தியாக தெரியவந்திருக்கும் ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் 1TB சேமிப்பக மாதிரியுடன் வரக்கூடும், புரோ அல்லாத மாதிரிகள் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கக்கூடும். கூடுதல் சேமிப்பகத்திற்கு, நீங்கள் iCloud அம்சத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வீடியோவில், ப்ரோஸர் ஐபோன் 13 மாடல்களில் உள்ள நாட்ச் அம்சம் பற்றியும் பேசியுள்ளார். டிப்ஸ்டரின் தகவலின்படி, வரவிருக்கும் ஐபோன் குறுகிய நாட்ச் பகுதியைக் கொண்டிருக்கும். இது புதிய தகவலல்ல, ஏனென்றால் இதற்கு முன்னர் பல அறிக்கைகள் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்த நேரத்தில் வேறுபட்டது என்னவென்றால், நாட்ச் பகுதி நீளமாக இல்லாமல் உயரமாக இருக்கும்.

முன்பில்லாததைப் போல்,  நாட்ச் நிலையின் தடிமன் குறைக்கப்படும். இது தற்போது சோதிக்கப்படும் ஐபோன்களின் முன்மாதிரிகளில் ஒன்றாகும் என்றும் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் ப்ரோஸர் தெரிவித்துள்ளார்.

ஐபோன் 13 ஐப் பற்றி பேசுகையில், ஜிஸ்சைனாவின் சமீபத்திய அறிக்கை, பார்க்லேஸ் ஆய்வாளர்களான பிளேனே கர்டிஸ் மற்றும் தாமஸ் ஓ மாலி ஆகியோரை மேற்கோள் காட்டி, ஆப்பிள் தனது முதல் ஐபோன் மாடல்களை இந்த ஆண்டு வைஃபை 6E ஆதரவுடன் வெளியிடும் என்று பரிந்துரைத்தது. 

Views: - 20

0

0