குறைஞ்ச விலையில ஸ்மார்ட்போன் கொடுக்க ரிலையன்ஸ் ஜியோவின் புதிய திட்டம்!

21 April 2021, 1:02 pm
Itel To Partner With Reliance Jio To Bring Affordable Mobiles in India
Quick Share

மலிவு விலையில் மொபைல் அடிப்படையிலான இணைப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் இந்தியாவில் இருக்கும் டிஜிட்டல் இணைப்பு பிளவுகளை மூட ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டணி அமைக்க உள்ளது இந்தியாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஐடெல் நிறுவனம். 

Itel To Partner With Reliance Jio To Bring Affordable Mobiles in India

மே மாதத்தில் இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுமையான டிஜிட்டல் சேவைகளின் அனுபவத்தைப் பெற சிறிய பட்டன் தொலைபேசிகளிலிருந்து ஸ்மார்ட்போன்களுக்கு மேம்படுத்த விளையும் பயனர்களிடத்தில் இந்த கூட்டணி கவனம் செலுத்த உள்ளது.

இந்த கூட்டணியின் மூலம், டிஜிட்டல் இந்தியா பயணத்தில் கிராமப்புற மக்களும் சில தனித்துவமான மற்றும் சிறப்பான வசதிகளைப் பெற முடியும் என்று இந்த தகவலுக்கு நெருக்கமான தொழில்துறை வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டணியின் மூலம் இந்திய பயனர்கள் ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து சில அற்புதமான சலுகைகளையும் ஐடலில் இடமிருந்து குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்களையும் எதிர்பார்க்கலாம்.

ஐடெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டுமே மிக குறைந்த விலையில் தங்கள் சேவைகளை தற்போது இந்தியாவில் வழங்கி வருகின்றன. இப்போது இந்த கூட்டணியின் மூலம் இந்நிறுவனங்கள் அதிக மக்களிடம் தங்கள் மலிவு விலையிலான சேவைகளைக் கொண்டு செல்ல முடியும் என்று ஊகிக்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் அப்டேட்டுகளுக்கு updatenews360 உடன் இணைந்திருங்கள்.

Views: - 1637

0

0