கழிவுகளில் இருந்து கட்டுமானப் பொருளை உருவாக்கி உலகையே கலக்கி வரும் ஜப்பான் விஞ்ஞானிகள்!!!

Author: Hemalatha Ramkumar
8 October 2021, 6:43 pm
Quick Share

ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் கான்கிரீட் கழிவுகள் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு புதிய வகை கட்டுமானப் பொருளை உருவாக்கியுள்ளனர்.

இது டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. இது சில நீர்வாழ் உயிரினங்கள் காலப்போக்கில் எவ்வாறு புதைபடிவங்களாக கடினமாகின்றன என்பதில் இருந்து உத்வேகம் பெறுகிறது. இறந்த கரிமப் பொருட்களிலிருந்து கடினமான கால்சியம் கார்பனேட் படிவுகளை உருவாக்கும் ஒரு செயல்முறை மூலம் இது நிகழ்கிறது.

கான்கிரீட் உருவாக சிமென்ட் மற்றும் நீருக்கு இடையேயான எதிர்வினையில் கால்சியம் அவசியம். இந்த ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் இப்பேய் மரியுமாவின் கருத்துப்படி, இதே காரியத்தைச் செய்வதற்கு குறைவான கார்பன்-தீவிர வழியைப் பெறுவதற்கான வாய்ப்பாக அவர் இதைப் பார்த்தார்.

இன்று சுண்ணாம்புக் கல்லிலிருந்து எடுக்கப்படும் கால்சியம் பிரித்தெடுத்தலுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைந்த வெப்பநிலையில், ஒரு தொழில்துறை வெளியேற்ற கழிவான கான்கிரீட்டுடன் CO2 யை மாருயமா இணைத்தார்.

ஒரு பொருளாக கால்சியம் கார்பனேட் மிகவும் நிலையானது. இதனால் அது மிகவும் நீடிக்கும். இருப்பினும், அது வலுவாக இருந்தாலும், கட்டிடத்தை உருவாக்க இன்று பயன்படுத்தப்படும் கான்கிரீட் போல வலுவாக இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சிறிய வீடுகள் போன்ற சிறிய கட்டுமானத் திட்டங்களுக்கு இது சரியானதாக இருக்கும். ஆனால் அதற்குக் கூட இது இன்னும் முழுதாக தயாராக இல்லை. ஏனென்றால் அவர்கள் இப்போது சில சென்டிமீட்டர்கள் அளவிலான சிறிய தொகுதிகளையே உருவாக்கியுள்ளனர். இது கருத்தாக்கத்தின் ஆதாரமாக இருக்கிறது.

இந்த ஆய்வில் மற்றொரு எழுத்தாளர் தகாஃபுமி நோகுச்சி மேலும் கூறியதாவது, “இந்த பகுதியில் முன்னேறுவது உற்சாகமாக உள்ளது. ஆனால் இன்னும் பல சவால்களை சமாளிக்க வேண்டும். அத்துடன் கால்சியம் கார்பனேட் கான்கிரீட்டின் வலிமை மற்றும் அளவுகளை அதிகரிப்பது, இன்னும் சிறப்பாக இருக்கும். இது காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளில் ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

Views: - 378

0

0