தாறுமாறான இன்டர்நெட் ஸ்பீடுடன் தரமான சம்பவம் செய்த ஜப்பான்! | World’s Fastest Internet Speed

22 July 2021, 12:23 pm
Japan sets new world record for internet speed
Quick Share

இணைய சேவை கிடைக்க தொடங்கிய சமயத்தை நினைவுக்கூர்ந்துப் பார்த்தால், சில Kb உள்ள போட்டோக்களையே பைட்ஸில் டவுன்லோடு செய்ய மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் கூட காத்துக்கிடந்திருப்போம். ஆனால், இன்றோ சில நிமிடங்களில் ஒரு படத்தையே கூட டவுன்லோடு செய்துவிடும் அளவுக்கு Mbps, Gbps, Tbps என தொழில்நுட்ப உதவியுடன் இணைய வேகத்தில் இமாலய சாதனை அடைந்துள்ளோம் என்று தாங்க சொல்லணும். அப்படி இணைய வேகத்தில் மேலும் ஒரு புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது ஜப்பான்.

ஜப்பானின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (Japan’s National Institute of Information and Communications Technology – NICT) ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் உலகின் அதிவேக இணைய வேகத்தை எட்டி புதிய உலக சாதனையை படைத்துள்ளனர். ஒரு நொடிக்கு 319 டெராபைட்ஸ் இணைய வேகத்தை எட்டி புதிய உலக சாதனைப் படைத்து உலக நாடுகளையே அசர வைத்துள்ளது ஜப்பான். 1 GB என்பது 1000 MB அதே போல 1 TB என்பது 1000 GB ஆகும். இப்போது 1 TB, 2 TB எல்லாம் தாண்டி 319000 ஜிபி அதாவது 319 TB வேகத்தை ஒரு நொடியில் அடையும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த 319 TBPS வேகத்துடன் 57000 முழு நீள படங்களை கண்ணிமைக்கும் ஒரு நொடியில் டவுன்லோடு  செய்துவிட முடியும். 

இந்த இணைய வேகத்தை எட்டுவதற்கான சோதனை முயற்சியில் ஃபைபர் ஆப்டிக் கேபிள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஃபைபர் ஆப்டிக் கேபிள் தொழில்நுட்பத்தில் பொதுவாக மையத்தில் ஒரே ஒரு கோர் ஃபைபர் ஆப்டிக் கேபிள் மட்டுமே இருக்கும். அதன்மேல் கேபிளுக்கான பாதுகாப்பு அமைப்பு இருக்கும். ஆனால் இந்த புதிய சோதனையில் 4 கோர் ஃபைபர் ஆப்டிக் கேபிள் பயன்படுத்தப்படுகிறது.

நான்கு கோர்கள் பயன்படுத்தப்படுவதால் எதிர்பார்த்ததை விட டேட்டா டிரான்ஸ்பர் மிகவும் வேகமாக நடந்தது. அதோடு இந்த சோதனை முயற்சிக்கு 3001 கிமீ தூரத்திற்கு கேபிள் நீளத்தை செயற்கையாக அதிகரித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இதில் சின்ன தடங்கல் கூட ஏற்படாமல் 319 TBPS வேகத்தில் டேட்டா டிரான்ஸ்பர் ஆகியுள்ளது.

இந்த நான்கு கோர்கள் கொண்ட கேபிளில் இணைய பரிமாற்ற வேகத்தை அதிகரிப்பதற்காக ஆம்ப்ளிபயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பூமியில் மிகவும் அரிதாக கிடைக்கும் மினரல்களைக் கொண்டு, அதன்மூலம் இந்த புதிய வகை ஆம்ப்ளிபயரை உருவாக்கி உள்ளனர். இதன் காரணமாகவே இணையத்தின் வேகம் நொடிக்கு 319 TB வேகம் வரை எட்டியதாக ஜப்பானின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக யூனிவர்சிட்டி ஆஃப் லண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 178 TBPS வேகத்தை எட்டியிருந்த நிலையில் அச்சாதனை இப்போது ஜப்பான் ஆராய்ச்சியாளர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இது நேரடியாக மக்களின் பயன்பாட்டுக்கு கிடைப்பது சந்தேகம் தான். ஆனால் 6ஜி, 7ஜி போன்ற தொழில்நுட்பத்தில் இணையத்தின் வேகத்தை அதிகரிக்க இது உதவியாக இருக்கும். சோதனை முயற்சியாக வெற்றி அடைந்துள்ள இந்த இணைய வேகம் முழுமையாக பயன்பாட்டுக்கு வர சில மாதங்கள் வரை ஆகும் என்று சொல்லப்படுகிறது.

Views: - 172

0

0

Leave a Reply