“ஆளவந்தான்” ஜெஃப் பெசோஸ்: பதவி விலக காரணம் என்ன?! அவர் கடந்து வந்த பாதை – கற்றுக்கொடுத்த பாடம் – ஒரு பார்வை

By: Dhivagar
3 February 2021, 9:24 am
Jeff Bezos to step down as Amazon chief executive
Quick Share

உலகின் மிகப்பெரிய நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக திடீரென அறிவித்துள்ளார்.  இதை அவர் ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

ஜெஃப் பெசோஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்தாலும், அவர் தொடர்ந்து நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Amazon founder Jeff Bezos steps down as CEO, Andy Jassy to take the new role; Here's the full letter

அமேசான் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிடும் போது ஜெஃப் பெசோஸ் இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அமேசான் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமேசான் 1994 இல் ஜெஃப் பெசோஸ் அவர்களால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் தற்போது 185 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டுள்ளது. இவ்வளவு பெரிய நிறுவனத்தை உருவாக்கி இது நாள் கட்டிக்காத்த ஜெஃப் பெசோஸ் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது? இவர் திடீரென பதவி விலக காரணம் தான் என்ன? பார்க்கலாம் வாங்க.

ஜெஃப் பெசோஸின் கதை

ஜெஃப் பெசோஸ் அவர்களின் தந்தை கியூபாவில் இருந்து அகதியாக வந்தவராக இருந்தாலும், பெசோஸின் தாயின் தந்தை நிறைய சொத்துக்களை வைத்திருந்தார். சிறு வயதிலிருந்தே துறுதுறு என்று இருக்கும் ஜெஃப் பெசோஸ் தன் முதல் நண்பனாக கரம் பிடித்தது கண்டுபிடிப்பைத் தான்.

முதல் காதல்

Amazon founder Jeff Bezos steps down as CEO, Andy Jassy to take the new role; Here's the full letter

தனது வீட்டில் தானிருக்கும்போதே தொல்லை கொடுத்து வந்த  எலிகளை பயமுறுத்த ஒரு மின்னணு அலாரம் ஒன்றை கண்டுபிடித்தார்; அங்கிருந்து அவருக்கு கண்டுபிடிப்புக்கான தாகம் அதிகமாக ஆரம்பித்து இருந்தது. தனது தாத்தாவின் கடையில் எதையேனும் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்த இந்த சின்னஞ் சிறுவனின் எண்ணமெல்லாம் விண்வெளி வீரராக ஆக வேண்டும் என்பது தான். நாம் ஒன்று நினைக்க அதுவொன்று நடக்கும் என்பதற்கேற்ப காலம் அவருக்கு பரிசாக வேறொன்றை வைத்திருந்தது. நாட்கள் கடந்தன.

கல்லூரி காதல்

Amazon founder Jeff Bezos steps down as CEO, Andy Jassy to take the new role; Here's the full letter

இப்போது சின்னஞ்சிறுவன் ஜெஃப் பெசோஸ் இளைஞனாக கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார். அவருக்கும் இரண்டாம் காதல் தோன்ற ஆரம்பித்தது. இரண்டாம் காதலா? ஆமாங்க.. இயற்பியலில் மீதிருந்த அவரின் காதல் கணினி அறிவியல் மீது திரும்பியது. 

கணினி மற்றும் மின்னணுவியல் அறிவியல் பிரிவில் பட்டம் பெற்று கல்லூரி படிப்பை முடித்தார். மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றி மில்லியன் கணக்கில் சம்பாதித்தார். இளம் வயதிலேயே, மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றின் துணைத் தலைவரானார், மேலும் இணைய பயனர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2300 சதவீதம் அதிகரிப்பதைக் கவனித்துக்கொண்டிருந்தார்; அந்த நேரத்தில், இணைய வர்த்தகர்கள் சேவை வரி செலுத்த வேண்டியதில்லை என்று அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க தோன்றியது மூன்றாம் காதல்.. இணையம் மீது. 

புது முயற்சி

Amazon founder Jeff Bezos steps down as CEO, Andy Jassy to take the new role; Here's the full letter

இணைய வாயிலாக புத்தகங்களை ஆர்டர் செய்தால், சலுகை விலையில் வாடிக்கையாளரின் வீட்டிற்கே கொண்டு வந்து வழங்குவதே அவரின் கான்செப்ட். இதில் அவர் சலுகைகளை வழங்கியது தான் கூடுதல் சிறப்பு. அவரின் இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு இருந்தது; நாட்கள் செல்ல செல்ல சில வாடிக்கையாளர்கள் நீங்கள் ஏன் மின்னணு சாதனங்களையும் விற்கக்கூடாது என்று கேட்க.. மின்னணு சாதனங்களும் சேர்ந்துகொண்டன. சூடுபிடிக்க தொடங்கியது ஆன்லைன் வணிகம். அமேசானில் விற்கப்படாத பொருட்கள் எதுவும் இல்லை என்ற நிலைக்கு வணிகத்தைப் பெரிதாக்கினார் ஜெஃப் பெசோஸ். அவரின் கண்டுபிடிப்புக்கு பரிசாக உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக உருவெடுத்தார். 

இவ்வளவு சிறப்பாக நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கையில் ஜெஃப் இந்த திடீர் முடிவை எடுக்க காரணம் என்ன?

Amazon founder Jeff Bezos steps down as CEO, Andy Jassy to take the new role; Here's the full letter

அதற்கு ஜெஃப் கூறும் பதில் என்ன தெரியுமா? அமேசானின் புதிய தயாரிப்பு மற்றும் அதன் ஆரம்ப முயற்சிகளில் சிலவற்றில் கவனம் செலுத்தப்போவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஒரு கடிதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த பயணம் 27 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அப்போது அமேசான் ஒரு யோசனை மட்டுமே இருந்தது. அதற்கு பெயர் கூட வைக்கவில்லை. அப்போது என்னிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி என்றால் “இணையம் என்றால் என்ன?” என்பதுதான்” என்று தெரிவித்தார்.

ஆனால், இப்போது இணையம் என்றால் என்ன, அமேசான் என்றால் என்ன என்றெல்லாம் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள சின்ன குழந்தைகளுக்கும் கூட தெரியும் என்பதே உண்மை. அதுதான் பெசோஸின் வெற்றியும் கூட.

நமக்கான பாடம்

Amazon founder Jeff Bezos steps down as CEO, Andy Jassy to take the new role; Here's the full letter

இந்நிறுவனம் இப்போது 13 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இது உலகின் மிக வெற்றிகரமான நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்று கேட்டால்? பெசோஸ் அவர்களின் பதில் ஒன்றாக தான் இருக்கும். ஆம், “கண்டுபிடிப்பு” தான். பெசோஸ் அவர்களின் வாழ்க்கை பயணித்தில் இருந்து நாம் கற்றுக்கொண்ட ஒரு வரி பாடம் என்றால்… “வெற்றிக்கான வேர் கண்டுபிடிப்பு” என்பது தான்.

அமேசான் வெப் சர்வீஸின் தலைவரான 52 வயதான ஆண்டி ஜாஸி என்பவர் அமேசான் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுபேற்க உள்ளார்.

Views: - 74

0

0