டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கட்டணம் அதிகமாகிவிட்டது என கவலையா? ஜியோ இருக்கும்போது நீங்க ஏன் கவலைப்படனும்?

Author: Dhivagar
1 September 2021, 11:45 am
Jio Launches New Prepaid Plans With 1 Year of Disney+ Hotstar Mobile
Quick Share

டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான அணுகலுடன் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் திட்டங்களின் விலைகளை உயர்த்தியுள்ள நிலையில் அவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதை தொடர்ந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்களுடன் ஜியோ புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. 

ஜியோவின் புதிய திட்டங்கள், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் 1 வருட சந்தாவை வழங்குவதைத் தவிர, வரம்பற்ற அழைப்பு, டேட்டா, எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ் மற்றும் பிற நன்மைகளையும் வழங்குகின்றன. 

Jio Launches New Prepaid Plans With 1 Year of Disney+ Hotstar Mobile

முன்னதாக, ஜியோ அதன் திட்டங்களுடன் ஹாட்ஸ்டார் VIP சந்தாவை வழங்கியது. அந்த சந்தாவில் லைவ் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் & டிவி நிகழ்ச்சிகள் மற்றும் 3 இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட உள்ளடக்கம் ஆகியவை அடங்கும். 

ஜியோ அறிமுகம் செய்துள்ள புதிய திட்டங்கள் பின்வருமாறு:

புதிய ஜியோ திட்டங்கள், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மேலே உள்ள அனைத்து நன்மைகளையும் மற்றும் புதியதாக ஆங்கில மொழியில் சர்வதேச உள்ளடக்கம் ஆகியவற்றையும் வழங்கும். இதில் டிஸ்னி+ ஒரிஜினல்கள், டிஸ்னியின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மார்வெல், ஸ்டார் வார்ஸ், நேஷனல் ஜியோகிராஃபிக், HBO, FX, ஷோடைம் மற்றும் பலவும் அடங்கும்.

Jio Launches New Prepaid Plans With 1 Year of Disney+ Hotstar Mobile

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய திட்டங்கள் 1 செப்டம்பர் 2021 முதல் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கும். மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்களில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் தற்போதைய சந்தா காலாவதியாகும் வரை நன்மைகளை தொடர்ந்து அனுபவிப்பார்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் OTT அணுகலை வழங்கும் புதிய ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.499 முதல் ஆரம்பமாகிறது. ரூ.499 விலையிலான திட்டம் தினசரி அடிப்படையில் 3 ஜிபி அதிவேக தரவுக்கான அணுகலை வழங்குகிறது, மேலும் 28 நாட்களுக்கு “வரம்பற்ற” குரல் அழைப்பு மற்றும் SMS நன்மைகளையும் வழங்குகிறது. இது அடிப்படையில் தற்போது 1.5 ஜிபி தினசரி அதிவேக டேட்டா நன்மையை 56 நாட்களுக்கு குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளைகளுடன் வழங்கும் ரூ.499 திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட திட்டமாகும்.

அதற்கடுத்து, ஜியோவின் ரூ.666 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 2 ஜிபி தினசரி அதிவேக டேட்டாவுக்கான அணுகல் மற்றும் வரம்பற்ற குரல் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் 56 நாட்களுக்கு வழங்குகிறது. 

அடுத்து, ரூ.888 விலையிலான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தினசரி 2 ஜிபி அதிவேக டேட்டா நன்மையையும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 84 நாட்களுக்கு எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது. 

இந்த தொடரில் கடைசி திட்டம் ரூ.2,599 விலையிலானது. இந்த திட்டம் தினசரி அடிப்படையில் 2 ஜிபி அதிவேக டேட்டாவை, 365 நாட்களுக்கு வழங்குகிறது, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் செய்தி நன்மைகளையும் வழங்கும். 

Views: - 383

0

0