JioPhone Next வாங்க தயாரா இருக்கீங்களா? அடுத்த வாரம் ரெடியா இருங்க! ஏன் தெரியுமா?

Author: Hemalatha Ramkumar
27 August 2021, 12:39 pm
Jio Phone Next pre-booking in India will start next week
Quick Share

ரிலையன்ஸ், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை செப்டம்பர் 10 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இப்போது சமீபத்திய தகவல் என்னவென்றால், 91Mobiles வெளியிட்டுள்ள தகவலின்படி அடுத்த வாரம் முதல் இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தொடங்கும்.

கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் டிஸ்பிளே, மொத்தம் இரண்டு கேமராக்கள் மற்றும் ஸ்னாப்டிராகன் 215 செயலி போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோபோன் நெக்ஸ்ட் பழைய வடிவமைப்புடன் மேல் மற்றும் கீழ்புற தடிமனான பெசல் கொண்டிருக்கும்.

பின்புறத்தில், இது மாத்திரை வடிவ கேமரா யூனிட் கொண்டிருக்கும். ஃபிரேமின் வலது பக்கத்தில் பவர் மற்றும் வால்யூம் பொத்தான்கள் இருக்கும்.

இந்த சாதனம் 5.5 இன்ச் HD+ (720×1440 பிக்சல்கள்) LCD திரை 18:9 என்ற விகிதத்திலும் மற்றும் 293 ppi பிக்சல் அடர்த்தி உடனும் கொண்டிருக்கும்.

ஜியோபோன் நெக்ஸ்ட் ஆக்மென்ட் ரியாலிட்டி ஃபில்டர்களுக்கான ஆதரவுடன் பின்புறத்தில் 13 MP சென்சார் உடன் பொருத்தப்பட்டிருக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, 8MP முன் எதிர்கொள்ளும் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்னாப்டிராகன் 215 செயலி உடன் ஆதரிக்கப்படும், அதனுடன் 3 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் இருக்கும்.

இது ஆண்ட்ராய்டு 11 (கோ பதிப்பு) இல் இயங்குகிறது, 2,500 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும், மேலும் திரையில் தெரியும் text-களை தானாக வாசிப்பது மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.

இணைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, கைபேசி வைஃபை, ப்ளூடூத், GPS மற்றும் ஹெட்போன் ஜேக் ஆகியவற்றுக்கான ஆதரவைக் கொண்டிருக்கும்.

ஜியோபோன் நெக்ஸ்டின் அதிகாரப்பூர்வ விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் செப்டம்பர் 10 அன்று அறிவிக்கப்படும். இருப்பினும், இந்த போன் அடுத்த வாரம் முதல் முன்பதிவு செய்ய கிடைக்கும் என்றும் இதன் விலை ரூ.3,499 ஆக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 347

0

0