ஜியோபுக்: ஜியோ OS உடன் மலிவு விலையில் ஆண்ட்ராய்டு லேப்டாப்?! இதென்னய்யா புதுசா இருக்கே!
5 March 2021, 6:48 pmரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோன் இந்தியாவில் பட்ஜெட் 4ஜி போன் சந்தையை பிரபலமாக்கியது. இப்போது, அதையடுத்து நிறுவனத்தில் இருந்து வரவிருக்கும் தயாரிப்பு ஆண்ட்ராய்டு லேப்டாப் ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அது ஜியோபுக் லேப்டாப் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நிறுவனம் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜியோபுக்கில் வேலை செய்யத் தொடங்கியது, இதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு 2021 ஆண்டின் முதல் பாதி வரை தொடர வாய்ப்புள்ளது.
விண்டோஸ் 10 os உடன் இயங்கும் பெரும்பாலான மடிக்கணினிகளைப் போலல்லாமல், ஜியோபுக் ஜியோ OS அடிப்படையாகக் கொண்டது, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி உடன் இயக்கப்படும் ஆண்ட்ராய்டு ஓப்பன் சோர்ஸ் ப்ராஜெக்டை (ASOP) அடிப்படையாகக் கொண்டது. இந்த ஜியோபுக் இடைப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC ஆல் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4ஜி LTE இணைப்புடன் 11 nm SoC உடன் இருக்கும் ஸ்னாப்டிராகன் 665 SoC ஆகியவற்றை கருத்தில் கொள்வதன் மூலம், ஜியோபுக் விலை எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன நிறுவனமான புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் இணைந்து ஜியோபுக் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
இது குறித்து அதிக தகவல்கள் இப்போது வெளியாகவில்லை. இது குறித்த கூடுதல் அப்டேட்டுகளுக்கு Updatenews360 உடன் இணைந்திருங்கள்.
0
0