ரூ.4,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ பதிப்பில் கார்பன் X21 இந்தியாவில் அறிமுகம்!

15 June 2021, 4:36 pm
Karbonn X21 with Android 10 Go Edition launched in India
Quick Share

கார்பன் பிராண்ட் நுழைவு நிலை ஸ்மார்ட்போனை ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போ கார்பன் X21 என்று அழைக்கப்படுகிறது. கார்பன் X21 போனின் விலை ரூ.4,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மற்றும் தற்போது பிளிப்கார்ட் வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது.

இது அக்வா கிரீன் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.

கார்பன் X21 விவரக்குறிப்புகள்

கார்பன் X21 ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் HD+ LCD பேனல் 1440 x 720 பிக்சல்கள் மற்றும் 295 ppi ரெசல்யூஷன் கொண்டது. இந்த கைபேசியில் UniSoc SC9863 சிப்செட் மற்றும் 2 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழியாக ஸ்டோரேஜை 128 ஜிபி வரை மேலும் விரிவாக்கலாம்.

தொலைபேசி ஒரு 8 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் வருகிறது. முன்பக்கத்தில், 5 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இரண்டு லென்ஸ்கள் ஒரு பிரத்யேக LED ஃபிளாஷ் யூனிட் உடன் உள்ளது. இதில் கைரேகை சென்சார் இல்லை.

மென்பொருள் முன்னணியில், கார்பன் X21 ஆண்ட்ராய்டு 10 கோ பதிப்பை இயக்குகிறது. இது மைக்ரோ USB போர்ட் வழியாக சார்ஜ் செய்ய 3,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இணைப்பு முன்னணியில், கைபேசி இரட்டை சிம், 4ஜி, சிங்கிள்-பேன்ட் வைஃபை மற்றும் புளூடூத் 4.2, ஒரு ஹெட்போன் ஜேக் மற்றும் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

Views: - 218

0

0