காலிஜெப் ஆப் என்றால் என்னங்க? எல்லோரும் சொல்றாங்க.. எனக்கு தெரியவில்லையே! இதோ.. இங்க தெரிஞ்சிக்கோங்க…

12 September 2020, 11:18 am
KhaaliJeb is a free payment app developed by IIT Allahabad alumni
Quick Share

முன்பெல்லாம், அவசர செலவுக்கு ஒரு 100 ரூபாய் எடுக்கவேண்டும் என்றாலும் வங்கிகளுக்கு சென்று கால்கடுக்க வரிசையில் நின்று சலான் எழுதிக்கொடுத்து, கேஷியரிடம் இருந்து அந்த 100 ரூபாய் தாளை வாங்குவதற்குள் அப்பப்பா… சம்பாதிக்கும் போது கூட அவ்வளவு சலிப்பு தெரிந்திருக்காது. 

ஆனால், இந்த இணைய சேவையும் தொழில்நுட்பமும் இந்த நிலைமையை அப்படியே மாற்றிவிட்டது. ஆமாங்க, இப்போதெல்லாம் சாதாரணமாக மெசேஜ் அனுப்புவது போல் உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் பணத்தை அனுப்பிவிட முடிகிறது. நாம் வங்கிக்கு செல்ல வேண்டிய தேவையில்லை, பணத்தை எடுக்க பெரிய வரிசையில் நிற்க வேண்டிய அவசியமும் இல்லை. டிஜிட்டல் கொடுப்பனவு சந்தை என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருப்பதால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் கொடுப்பனவு செயலிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன. அதில் கூகிள் பே, பேடிஎம், ஃபோன்பே போன்றவை வெற்றிகரமாகவும் உள்ளன.

இந்த கொடுப்பனவு செயலிகள் மூலம் கட்டணங்களை செலுத்தும்போது பயனர்களுக்கு ஸ்கிராட்ச் கார்டு, கேஷ்பேக் மற்றும் பல வெகுமதிகளை நிறுவனங்கள் வழங்குகின்றன. மேலும், இந்தியாவில் டிஜிட்டல் கொடுப்பனவு சந்தையில் இவை பெரும் பங்கைக் கொண்டுள்ளன. இந்த பயன்பாடுகளுக்கு எதிராக போட்டியிடும் முயற்சியில், ஒரு இந்திய பயன்பாடு தடம் பதித்துள்ளது. அதுதான்  இந்த காலிஜெப் ஆப். இந்த துறையில் ஒரு புதிய நுழைவு என்றாலும், காலிஜெப் ஆப்  சில அற்புதமான அம்சங்களை வழங்குகிறது. அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

காலிஜெப் ஆப் என்றால் என்ன?

காலிஜெப் ஆப் என்பது ஐ.ஐ.டி அலகாபாத் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இலவச கட்டண பயன்பாடாகும். இந்த பயன்பாடு கோடக் மஹிந்திரா வங்கியால் இயக்கப்படுகிறது மற்றும் UPI அடிப்படையிலான கட்டணங்களை அனுமதிக்கிறது. இந்த பயன்பாட்டின் மூலம், பயனர்கள் UPI ID அல்லது மொபைல் எண் மற்றும் UPI PIN உதவியுடன் UPI வழியாக பணத்தை அனுப்பலாம் மற்றும் பெறலாம். அதேபோல் காலிஜெப் ஆப் மூலம் மொபைல் அல்லது DTH ரீசார்ஜ், பில்களை செலுத்துதல் போன்ற பலவற்றை செய்ய முடியும். QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமோ அல்லது UPI ஐடியைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ வணிகர்களுக்கு பணம் செலுத்தவும் இந்த காலிஜெப் ஆப் அனுமதிக்கிறது.

பயனர்கள் பயன்பாட்டில் பல வங்கி கணக்குகளைச் சேர்க்கலாம் மற்றும் அவர்களின் வங்கி இருப்புநிலையையும் சரிபார்க்கலாம். இந்த ஆப் பயனர்களை ரூ.1 லட்சம் வரை transfer செய்ய அனுமதிக்கிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், காலிஜெப் பயனர்கள் Paytm, Google Pay, PhonePe போன்ற பிற UPI பயன்பாடுகள் மூலமாகவும் இன்னொருவருக்கு பணம் செலுத்த அனுமதிக்கிறது.

காலிஜெப்: பயனுள்ள அம்சங்கள்

காலிஜெப் செயலியின் மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்கள் அனைத்து UPI கட்டண பயன்பாடுகளுக்கு பொதுவானவை என்றாலும், முக்கியமாக நம்மை கவரும் விஷயம் அதன் Student Discount Program எனும் மாணவர் தள்ளுபடி திட்டம் தான். இந்த திட்டம் பயனர்கள் 29 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தால், பல்வேறு பிராண்டுகளிலிருந்து பிரத்யேக தள்ளுபடிகள் மற்றும் பிற சலுகைகளைப் பெற அனுமதிக்கிறது. 

இந்த செயலியில் சரிபார்ப்புக்கு, பயனர்கள் தங்கள் பெயர், பாலினம், DOB மற்றும் சரிபார்ப்பு ID யை உள்ளிட வேண்டும். மேலும், அது அவர்களின் மார்க் ஷீட்ஸ் மற்றும் பிற ஆவணங்களையும் கேட்கும்.

மற்ற சுவாரஸ்யமான அம்சம் கேமிங். ‘பிளே அண்ட் இயர்ன்’ பிரிவு பயனர்களை காலிஜெப் பயன்பாட்டிற்குள் விளையாடுவதற்கும் வெகுமதிகளைப் பெறுவதற்கும் அனுமதிக்கிறது. இந்த அம்சம் Gamezop.com மூலம் இயக்கப்படுகிறது மற்றும் பயனர்கள் பல கேம்களை விளையாடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

பதிவிறக்கம் செய்து நிறுவுவது எப்படி?

இப்போதைக்கு, காலிஜெப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இது விரைவில் iOS க்காக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலிஜெப் பயன்பாட்டைப் பதிவிறக்க, நீங்கள் கீழே குறிப்பிட்ட படிகளைப் பின்பற்ற வேண்டும்.

  • முதலில், கூகிள் பிளே ஸ்டோருக்குச் செல்லுங்கள்
  • காலிஜெப் ஆப் ( KhaaliJeb app) என்று தேடுங்கள்
  • இன்ஸ்டால் என்பதை அழுத்தி அதை உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கவும்
  • அவ்வளவுதான்! பண பரிமாற்றங்களுக்கு காலிஜெப் பயன்பாட்டைப் பயன்படுத்தி நீங்கள் ரசிக்கலாம் மற்றும் வெகுமதிகளைப் பெறலாம்.

Views: - 0

0

0