கூகிள் போட்டோஸில் இந்த மாதிரியான அம்சங்கள் கூட இருக்கா…???

Author: Hemalatha Ramkumar
7 October 2021, 4:53 pm
Quick Share

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேக்கப் எடுப்பதற்கு கூகுள் போட்டோஸ் சிறந்த பயன்பாடாகும். ஸ்மார்ட்போன், லேப்டாப் அல்லது டேப்லெட்டாக இருந்தாலும் எந்த சாதனத்திலிருந்தும் அனைத்து ஊடகங்களையும் ஒருவர் எளிதாக அணுகலாம். செயலியின் மொபைல் பதிப்பில் சில அம்சங்கள் பெரும்பாலும் மறைக்கப்பட்டிருப்பதால், அனைத்து அம்சங்களையும் விரைவாக அணுக ஒருவர் பயன்பாட்டின் வெப் பதிப்பைப் பயன்படுத்தலாம். கூகுள் போட்டோஸில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும் ஐந்து அம்சங்களை இப்போது பார்க்கலாம்:-

1. புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைத் எடிட் செய்ய கூகிள் போட்டோஸ் உங்களை அனுமதிக்கிறது:
கூகுள் போட்டோஸ் ஒரு புதிய அப்டேட்டைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பயனர்கள் புகைப்படம் அல்லது வீடியோக்களை பயன்பாட்டிற்குள் சென்று எடிட் செய்யலாம். முன்பு வெப் பதிப்பில் மட்டுமே இருந்த இந்த அம்சம் இப்போது மொபைல் பதிப்பிலும் உள்ளது.

2. கூகிள் போட்டோஸில் கொலாஜ் அல்லது திரைப்படத்தை உருவாக்கலாம்:
கூகிள் போட்டோஸ் பயன்பாடு பயனர்கள் தங்கள் புகைப்படங்களைப் பயன்படுத்தி திரைப்படம் அல்லது கொலாஜை உருவாக்க அனுமதிக்கிறது. இந்த அம்சத்தை மொபைல் பதிப்பின் லைப்ரரி பிரிவில் காணலாம்.

3. சமீபத்தில் நீக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மீட்டெடுக்கலாம்:
நீங்கள் சமீபத்தில் உங்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை Google போட்டோஸில் இருந்து நீக்கியிருந்தால், அவற்றை டிராஷ் பிரிவில் இருந்து மீட்டெடுக்கலாம். மொபைலில், நீங்கள் பயன்பாட்டைத் திறந்து லைப்ரரி பிரிவுக்குச் செல்ல வேண்டும். அங்கு நீங்கள் டிராஷ் பகுதியைக் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்தால் உங்கள் நீக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் அணுக முடியும்.

நீக்கப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோ டிராஷில் இல்லை என்றால், நீங்கள் அதை மீட்டெடுக்க முடியாது. நீங்கள் 60 நாட்களுக்கு முன்பு மீடியாவை டிராஷூக்கு நகர்த்தினால் அல்லது அதை உங்கள் டிராஷிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிட்டால் அல்லது உங்கள் சாதனத்தின் கேலரி பயன்பாட்டிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டால், அதை மீட்டெடுக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

4. கூகுள் போட்டோஸில் இடத்தை காலி செய்யலாம்:
கூகுள் போட்டோஸில் ஸ்டோரேஜ் மேனேஜ்மென்ட் கருவி உள்ளது. இது சேமிப்பக இடத்தை விரைவாக ஃப்ரீ செய்ய பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பாத புகைப்படங்கள், ஸ்கிரீன் ஷாட்கள், பெரிய வீடியோக்கள் மற்றும் பிற புகைப்படங்களை நீக்க கருவி உங்களை அனுமதிக்கிறது.

5. ஆர்சீவிற்கு (Archive) புகைப்படங்களை நகர்த்தலாம்:
பயன்பாட்டில் இந்த புகைப்படங்களை யாரும் பார்க்க தேவையில்லை என்று விரும்பாத நேரங்கள் உள்ளன. எனவே நீங்கள் அந்த புகைப்படங்களை ஆர்சீவ் செய்ய முடியும். இதற்காக, நீங்கள் லைப்ரரி> யுட்டிலிட்டீஸ்> புகைப்படங்களை ஆர்சீவிற்கு நகர்த்த வேண்டும். நீங்கள் இதைத் செய்யும்போது, Google Photos பயன்பாட்டில் யாரும் பார்க்க விரும்பாத புகைப்படங்களை நீங்கள் மறைக்க முடியும்.

Views: - 498

0

0