செங்கற்களைத் தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்துவது ஏன் தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!

1 March 2021, 12:25 pm
KNOW WHY BRICKS ARE SOAKED IN WATER BEFORE USING !!
Quick Share

கட்டிடங்களின் கட்டுமான பணிகளின்போது பயன்படுத்தப்படுவதற்கு முன்பு கட்டிடம் கட்டுபவர்கள் அல்லது கட்டமைப்பாளர்கள் அல்லது தினசரி ஊழியர்கள் செங்கற்களைத் தண்ணீரில் ஊறவைப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். செங்கற்கள் ஏன் தண்ணீரில் ஊறவைக்கப்படுகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? செங்கற்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு தண்ணீரில் ஊறவைப்பதற்கான காரணத்தைப் பற்றி இப்போது இந்த பதிவில் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

KNOW WHY BRICKS ARE SOAKED IN WATER BEFORE USING !!

கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான கட்டுமானப் பொருட்களில் செங்கற்களும் ஒன்று. இது செவ்வக வடிவங்களில் கிடைக்கிறது மற்றும் இது எப்போதும் ஒரே பரிமாணங்களில் தான் கிடைக்கிறது. 

செங்கல் கட்டமைப்பு என்பது ஒரு சிறந்த கட்டுமானக் கலையாகும். செங்கல் கட்டமைப்பில், செங்கற்கள் சிமென்ட், மணல் மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையின் உதவியுடன் பிணைக்கப்படுகின்றன. செங்கல் கட்டமைப்பின் வலிமை முக்கியமாக செங்கற்களின் தரம் மற்றும் சிமென்ட், மணல் மற்றும் நீர் வகையைப் பொறுத்தது.

KNOW WHY BRICKS ARE SOAKED IN WATER BEFORE USING !!

செங்கற்கள் இயற்கையில் துளைகளுடன் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மைக் கொண்டவை. கட்டுமானத்திற்கு பயன்படுத்த வேண்டிய செங்கற்களை தண்ணீரில் ஊற வைக்கும்போது, செங்கற்களின் துளைகளில் உள்ள ​​காற்று வெளியாகி, அது தண்ணீரை உறிஞ்சிவிடும். இப்போது ஊறவைத்த செங்கற்களைக் கட்டமான பணிகளுக்கு பயன்படுத்தும்போது ஈரமான சிமென்ட், மணல் மற்றும் நீரின் கலவையில் இருந்து எந்த நீரையும் உறிஞ்சாது.

KNOW WHY BRICKS ARE SOAKED IN WATER BEFORE USING !!

ஒருவேளை நாம் செங்கற்களை ஊறவைக்காமல் அப்படியே பயன்படுத்தினால் செங்கற்கள் சிமென்ட், மணல் மற்றும் நீரின் கலவையில் இருந்து தண்ணீரை உறிஞ்சும், அது கட்டமைப்பின் வலிமையை பெருமளவில் குறைத்துவிடும். இதனால், செங்கற்களுக்கும் சிமென்ட், மணல் மற்றும் நீரின் கலவைக்கும் இடையில் ஒரு வலுவான பிணைப்பு ஏற்படாமல் போய்விடும். இறுதியில், சுவரின் பிணைப்பு மிகவும் பலவீனமாகிவிடும்.

அதுமட்டுமல்லாமல், செங்கற்களில் இருக்கும் அழுக்கு மற்றும் கரையக்கூடிய உப்புக்கள் போன்றவை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அகற்றப்படும்.

செங்கற்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும், இதனால் நீர் செங்கற்களின் முழு ஆழம் வரை ஊடுருவும். பொதுவாக செங்கற்களை குறைந்தபட்சம் 12 மணி நேரம் வரை ஊற வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. காற்று குமிழ்கள் வெளியாவது நிற்கும் வரை செங்கற்களை ஊறவைக்கலாம்.

KNOW WHY BRICKS ARE SOAKED IN WATER BEFORE USING !!

என்னங்க, கட்டுமான பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கு முன்னதாக செங்கற்களைத் தண்ணீரில் ஊறவைப்பதற்கான காரணங்களைத் தெரிஞ்சுக்கிடீங்களா! இதே போல உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களையும் கமெண்ட்ல பதிவு பண்ணுங்க. அதற்கான விளக்கங்களையும் இன்னொரு பதிவுல பார்க்கலாம்.

Views: - 53

0

0