KTM மற்றும் ஹஸ்குவர்னா பைக்குகளின் விலைகள் திடீர் உயர்வு | புதிய விலை பட்டியல் & விவரங்கள்

5 July 2021, 4:08 pm
KTM & Husqvarna Prices Increased In India: Model Wise Price List, Old & New Price Comparision
Quick Share

ஜூலை 2021 இல் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கேடிஎம் மற்றும் ஹஸ்குவர்னா மோட்டார் சைக்கிள்களுக்கும் விலை உயர்வை கேடிஎம் நிறுவனம் அறிவிக்கிறது. இந்த ஆண்டில் இந்த பிராண்டின் மூன்றாவது விலை உயர்வு இதுவாகும். விலை அதிகரிப்பைப் பொறுத்தவரை ரூ.256 முதல் ரூ.11,423 வரை இருக்கும்.

மாடல் வாரியாக புதிய Vs பழைய விலைகள்

மாடல்புதிய விலைபழைய விலைவித்தியாசம்
டியூக் 125₹1,70,515₹1,60,575₹9,940
டியூக் 200₹1,85,606₹1,83,584₹2,022
டியூக் 250₹2,28,736₹2,21,888₹6,848
டியூக் 390₹2,87,545₹2,76,187₹11,358
RC 125₹1,80,538₹1,70,470₹10,068
RC 200₹2,08,602₹2,06,349₹2,253
RC 390₹2,77,517₹2,66,159₹11,358
250 அட்வென்ச்சர் ₹2,54,995₹2,54,739₹256
390 அட்வென்ச்சர்₹3,28,286₹3,16,863₹11,423
சுவார்ட்பைலன் 250₹2,10,650₹1,99,552₹11,098
விட்பைலன் 250₹2,10,022₹1,98,925₹11,097

மேற்சொன்ன அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் டெல்லி விலைகள்

KTM டியூக் விலைகள்

கேடிஎம் டியூக் 125 இந்தியாவில் ரூ.1.70 லட்சத்திற்கு விற்கப்படும் இரண்டாவது விலையுயர்ந்த 125 சிசி மோட்டார் சைக்கிள் ஆகும். பிராண்டின் முதன்மை டியூக் 390 பைக் ரூ.11,358 விலைஉயர்வுப் பெறுகிறது, இப்போது இதன் விலை ரூ.2.87 லட்சம் ஆகியுள்ளது. டியூக் 200 மற்றும் டியூக் 250 ஆகியவை முறையே ரூ.2,022 மற்றும் ரூ.6,848 விலை உயர்வுப் பெற்றுள்ளன.

KTM RC விலைகள்

RC 125 என்பது டியூக் 125 ஐ விட இந்தியாவில் ரூ.10,000 கூடுதல் விலையில் அதாவது ரூ.1.80 லட்சம் விலையில் விற்பனைச் செய்யப்படும் 125 சிசி மோட்டார் சைக்கிள் ஆகும். RC 200 ரூ.2,253 விலை உயர்வு பெற்றுள்ளது.

KTM அட்வென்ச்சர் விலைகள்

250 அட்வென்ச்சர் பைக்கானது ரூ.258 விலை உயர்வு பெற்றுள்ளது. இருப்பினும், 390 அட்வென்ச்சர் அதிகபட்சமாக ரூ.11,423 விலை உயர்வுப் பெறுகிறது மற்றும் ரூ.3.28 லட்சம் விலையில் விற்பனையாகிறது.

ஹஸ்குவர்ணா விலைகள்

இந்தியாவில் விற்கப்படும் ஸ்வார்ட்பைலன் மற்றும் விட்பிலன் 250 மோட்டார் சைக்கிள்கள் முறையே ரூ.11,098 மற்றும் ரூ.11,097 விலை உயர்வுப் பெற்றுள்ளன. சமீபத்திய விலை உயர்வுகளை அடுத்து, இரு மோட்டார் சைக்கிள்களும் ரூ.2 லட்சம் விலையைத் தாண்டியுள்ளன. இருப்பினும், அவை கேடிஎம் டியூக் 250 ஐ விட ரூ.18,000 மலிவானவை.

Views: - 155

0

0