குமார் மங்கலம் பிர்லா திடீர் பதவி விலகல் | Vi பங்குகள் கடும் சரிவு | வோடபோன்-ஐடியாவின் எதிர்கால நிலை?

Author: Dhivagar
5 August 2021, 4:46 pm
Kumar Mangalam Birla steps down as Vodafone Idea non-exec chairman; Himanshu Kapania to take over
Quick Share

சில நாட்களுக்கு முன்பு, வோடபோன் பங்குகளை அரசிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக குமார் மங்கலம் பிர்லா கூறியிருந்த நிலையில், தற்போது வோடபோன்-ஐடியாவின் நிர்வாகமற்ற தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவரின் பதவி விலகலை நிர்வாக குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்த நிர்வாகமற்ற தலைவராக ஹிமான்ஷூ கபானியா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இருக்கும் கடன் பிரச்சினை, AGR நிலுவை ஆகியவற்றுக்கு மத்தியில் பிர்லாவின் இந்த முடிவையடுத்து வோடபோன்-ஐடியாவின் நிலை கேள்விக்குறி ஆகியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் வோடஃபோன் ஐடியாவின் பங்குகள் வியாழக்கிழமை 24% வரை சரிந்தன. கடந்த சில நாட்களாகவே, வோடபோன் ஐடியாவின் நிர்வாக குழுவின் தீராத குழப்பம் நிலவி வந்த நிலையில், கோடீஸ்வரர் மற்றும் தொழிலதிபர் ஆன குமார் மங்கலம் பிர்லாவின் நிர்வாகமற்ற தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதை நிர்வாக குழுவும் உடனே ஏற்றுக்கொண்டும் உள்ளது.

பிர்லா தனது ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு பகுதியாக இருந்த ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் மற்றும் பிரிட்டனின் வோடபோன் plc நிறுவனத்தின் இந்தியா செயல்பாடுகளை இணைத்து 2018 இல் வோடஃபோன் ஐடியா என்ற ஒன்றை உருவாக்கி, அந்த சமயத்தில் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவாக்கினார்.

ஃபோர்ப்ஸ் தகவளின்படி, 14 பில்லியன் டாலர் நிகர மதிப்புடைய பிர்லா அவர்கள் பதவி விலகியதை அடுத்து, ஆதித்யா பிர்லா குழுமத்தின் நிர்வாகமற்ற தலைவராக ஹிமான்ஷு கபானியா நியமிக்கப்படுவார் என்று வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது.

பிர்லா ஏன் பதவி விலக முயன்றார் என்பது குறித்து வோடபோன் ஐடியா நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது, ஆதித்யா பிர்லா குழுமத்தின் பிரதிநிதிகளும் எந்த தகவலையயும் தெரிவிக்கவில்லை.

வோடாபோன் சமீப காலமாக மிகப்பெரிய அளவில் பயனர் தளத்தை இழந்தது. மேலும் பாரதி ஏர்டெல் மற்றும் முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவுடன் கடுமையாக இன்றுவரை போராடி வருகிறது.

கடந்த மே 31 நிலவரப்படி, வோடபோன் 277.6 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களைக் கொண்டு இந்தியாவின் மூன்றாவது தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது. இதே வேளையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை, முறையே 431.2 மில்லியன் மற்றும் 348.3 மில்லியன் சந்தாதாரர்களுடன் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

ஏற்கனவே அதல பாதாளத்தில் இருக்கும் வோடாபோனின் பங்குகள் பிர்லாவின் பதவி விலகலால் மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மிகவும் மோசமான நிலைமையில் இருக்கும் வோடபோன் ஐடியா மீண்டு வருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Views: - 1123

0

0