லெனோவா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 48MP குவாட் கேமராக்களுடன் புதிய Lenovo K13 Note அறிமுகம்

23 June 2021, 2:31 pm
Lenovo K13 Note announced
Quick Share

லெனோவா பிராண்ட் ரஷ்யாவில் லெனோவா K13 நோட் எனப்படும் புதிய நுழைவு நிலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பிப்ரவரி மாதம் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ G10 இன் மறுபெயரிடப்பட்ட மாடல் தான் இந்த தொலைபேசி என்றும் கூறப்படுகிறது.

லெனோவா K13 நோட் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி RAM + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு RUB 12,490 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.12,800) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அரோரா கிரே மற்றும் பேர்ல் சகுரா வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

லெனோவா K13 நோட் விவரக்குறிப்புகள்

லெனோவா K13 நோட் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ (720×1,600 பிக்சல்கள்) IPS டிஸ்ப்ளே 60 Hz புதுப்பிப்பு வீதம் 20:9 திரை விகிதம் உள்ளது. அட்ரினோ 610 GPU உடன் இணையாக ஸ்னாப்டிராகன் 460 SoC உடன் இந்த தொலைபேசி இயக்கப்படுகிறது. தொலைபேசி 4 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது. ஒரு ஹைபிரிட் SIM ஸ்லாட் கொண்டுள்ளது.

லெனோவா K13 நோட் ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் மெயின் கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் இரண்டு கூடுதல் 2 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் டெப்த் கேமராக்களுடன் குவாட் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், தொலைபேசி 8 மெகாபிக்சல்கள் செல்பி சென்சார் வாட்டர்-டிராப் ஸ்டைல் நாட்ச் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

இணைப்பு விருப்பங்களில் 4ஜி, வைஃபை, புளூடூத் 5.0, NFC, GPS, 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும். இது 165.22×75.73×9.19 மிமீ அளவுகளையும் மற்றும் 200 கிராம் எடையையும் கொண்டது.

இது 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மென்பொருள் முன்னணியில், K13 நோட் ஆண்ட்ராய்டு 11 ஐ உடன் இயங்கும். தொலைபேசியில் கைரேகை சென்சாரும் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டு உள்ளது.

Views: - 124

0

0