மடிக்கக்கூடிய மடிக்கணினியை அறிமுகம் செய்தது லெனோவா! இதோட விலை என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

23 June 2021, 2:47 pm
Lenovo launches foldable laptop in India at Rs. 3.29 lakh
Quick Share

லெனோவா நிறுவனம் புதிய முதன்மையான லேப்டாப் ஒன்றை மடிக்கக்கூடிய வசதியுடன் ThinkPad X1 Fold என்ற பெயரில் இந்திய சந்தையில் ரூ.3.29 லட்சம் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த சாதனம் எதிர்கால நோக்குடன் மடிக்கக்கூடிய வடிவமைப்பைக் கொண்டிருப்பதால் இதை ஒரு டேப்லெட் ஆகவோ அல்லது மடிக்கணினியாகவோ பயன்படுத்த முடியும்.

Lenovo launches foldable laptop in India at Rs. 3.29 lakh

இதன் முக்கிய சிறப்பம்சங்களைப் பற்றி பேசுகையில், இது 2K டிஸ்ப்ளே, இன்டெல் கோர் i5 செயலி மற்றும் 50W வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவுடனும் வருகிறது.

லெனோவா ThinkPad X1 Fold லேப்டாப்பில் தடிமனான பெசல்கள், பல இணைப்பு torque hinge மற்றும் 13.3 அங்குல 2K (2048×1536 பிக்சல்கள்) pOLED திரை உள்ளது.

சாதனத்தை ஒரு மேசையில் வசதியாக வைக்க ஒரு ஸ்டாண்ட் வசதியையும், ஒரு மடிக்கணினியாக பயன்படுத்த ப்ளூடூத் மினி ஃபோல்டு கீபோர்டு மற்றும் குறிப்புகளை எடுத்து ஓவியங்களை வரைய பயன்படுத்தக்கூடிய லெனோவா ஆக்டிவ் பேனா ஆகியவற்றுடனும் இந்த லேப்டாப் கிடைக்கிறது.

Lenovo launches foldable laptop in India at Rs. 3.29 lakh

லெனோவா ThinkPad X1 Fold இன்டெல் கோர் i5 சிப்செட்டிலிருந்து ஆற்றல் பெறுகிறது, இது 11 வது தலைமுறை இன்டெல் UHD கிராபிக்ஸ், 8 ஜிபி DDR 4 RAM மற்றும் 1 TB வரை SSD ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் 10 ப்ரோ உடன் இயங்குகிறது, 50W வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கிறது, மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 10.4 மணி நேரம் வரை இயங்கும் திறன் கொண்டது.

லெனோவா ThinkPad X1 Fold லேப்டாப்பில் பல டைப்-C 3.2 ஜெனரேஷன் -2 போர்ட்ஸ் மற்றும் கூடுதலாக நானோ சிம் ஸ்லாட் உள்ளிட்ட பல I/O போர்ட்கள் உள்ளன. வயர்லெஸ் இணைப்பிற்கு, இது வைஃபை 6 மற்றும் புளூடூத் 5.1 வசதியினை ஆதரிக்கிறது.

நான்கு மைக்ரோஃபோன்கள், டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர் அமைப்பு மற்றும் விண்டோஸ் ஹலோ ஆதரவுடன் HD வெப் கேமரா ஆகியவையும் உள்ளன.

Lenovo launches foldable laptop in India at Rs. 3.29 lakh

நோக்குநிலை மாற்றத்தை (Orientation Change) செயல்படுத்த சாதனம் Lenovo Mode Switcher பயன்பாட்டையும் கொண்டுள்ளது.

லெனோவா ThinkPad X1 Fold லேப்டாப்பின் விலை ரூ.3,29,000 முதல் ஆரம்பமாகிறது மற்றும் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சில அறிமுக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் காரணமாக ரூ.2,48,508 விலையில் இந்த மாத இறுதி வரை கிடைக்கும்.

Views: - 118

0

0