ரைசன் 5000 தொடர் CPU உடன் புத்தம்புதிய லெனோவா லேப்டாப்! இதோட விலை எவ்ளோ தெரியுங்களா?
8 April 2021, 4:52 pmலெனோவாவின் திங்க்புக் 14 லேப்டாப்பின் புதுப்பிக்கப்பட்ட மாடல் இப்போது சீன சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இப்போது இந்த புதிய லேப்டாப் 14 அங்குல டிஸ்ப்ளேவுடன் சமீபத்திய ரைசன் 5000 சீரிஸ் CPU உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த திங்க்புக் 14 லேப்டாப் ரைசன் பதிப்பிற்கான ஒரே ஒரு ரேம் மற்றும் சேமிப்பக உள்ளமைவுகளுடன் கிடைக்கிறது.
லெனோவாவிலிருந்து வரும் திங்க்புக் 14 ரைசன் பதிப்பு ஒற்றை 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் CNY 4,699 (தோராயமாக ரூ.53,500) விலையில் கிடைக்கிறது. இது சில்வர் கிரே நிறத்தில் வழங்கப்படுகிறது மற்றும் தற்போது சீனாவில் லெனோவா ஆன்லைன் ஸ்டோர் மூலம் விற்பனைக்கு கிடைக்கிறது. லெனோவா திங்க்புக் 14 ரைசன் பதிப்பின் சர்வதேச விற்பனைக் குறித்து லெனோவா எந்த தகவலையும் இதுவரை கொடுக்கவில்லை.
லெனோவா திங்க்புக் 14 ரைசன் பதிப்பு: விவரக்குறிப்புகள்
லெனோவா திங்க்புக் 14 ரைசன் பதிப்பு 14 அங்குல முழு HD LED டிஸ்ப்ளே, 100 சதவிகிதம் sRGB கலர் ஸ்பேஸ், 300 நைட்ஸ் உச்ச பிரகாசம், 1920 x 1080 பிக்சல்கள் ரெசொல்யூஷன் மற்றும் TUV ரைன்லேண்ட் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
திங்க்புக் 14 ரைசன் பதிப்பின் திரையை 180 டிகிரி திறக்க முடியும். இது 1.4 கிலோ எடையும் 17.9 மிமீ தடிமனும் கொண்டது. குறிப்பிட்டுள்ளபடி, லேப்டாப் AMD ரைசன் 5 5500U CPU உடன் இயக்கப்படுகிறது, இது ஆறு கோர்களையும் 16 ஜிபி DDR4 ரேம் மற்றும் 512 ஜிபி SSD ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.
லெனோவா திங்க்புக் 14 ரைசன் பதிப்பு 60Whr பேட்டரி உடன் ஆதரிக்கப்படுகிறது, இது வேகமான சார்ஜ் ஆதரவுடன் வருகிறது மற்றும் லெனோவாவின் தகவலின்படி, 1 மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆக கூடியது.
திங்க்புக் 14 ரைசன் பதிப்பில் இணைப்பு விருப்பங்களில் HDMI போர்ட், ஹெட்போன் காம்போ ஜாக், கார்டு ரீடர், RJ45 ஈதர்நெட் போர்ட், இரண்டு யூ.எஸ்.பி டைப்-C போர்ட்கள் மற்றும் இரண்டு யூ.எஸ்.பி டைப்-A 3.2 ஜென் 1 போர்ட்கள் உள்ளன. நோட்புக்கில் வைஃபை மற்றும் புளூடூத் 5.0 ஆகியவை உள்ளன. கூடுதல் அம்சங்களில் எளிதான அங்கீகாரத்திற்கான கைரேகை ஸ்கேனர் மற்றும் வீடியோ அழைப்புகள் மற்றும் பலவற்றிற்கான டிஸ்பிளேவின் மேலே 720p HD வெப்கேம் ஆகியவை உள்ளது.
0
0