2021ஆம் ஆண்டில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட எமோஜிகளின் பட்டியல் இதோ!!!

Author: Hemalatha Ramkumar
3 December 2021, 4:44 pm
Quick Share

இப்போதெல்லாம் மெசேஜ்களில் வார்த்தைகளை டைப் செய்வதை விட எமோஜிகளை பயன்படுத்துவதையே பலர் விரும்புகின்றனர். வார்த்தைகள் சொல்ல வரும் எமோஜிகள் இன்னும் கூட சுவாரஸ்யமாக தெரிவித்து விடுகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜிகளின் பட்டியலை Unicode Consortium வெளியிட்டுள்ளது.

Unicode Consortium ஆனது எமோஜிகள் பற்றிய ஒரு தனி சுவாரஸ்யமூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 3663 எமோஜிகள் உள்ளன. இவற்றில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன முதல் பத்து இடத்தை பிடித்துள்ளது.

ஒரே எமோஜி பல விதமான மனநிலையை வெளிப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக ராக்கெட்ஷிப் எமோஜி அதிக அளவிலான மாற்றம் மற்றும் எதிர்ப்பார்ப்பு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. போராட்டம், வலிமை, வெற்றி, உடற்பயிற்சி போன்றவற்றை பைசெப்ஸ் எமோஜி வெளியிடுகிறது.

உடையில் உள்ள ஸ்லீவை மடக்குவது போல இருக்கும் எமோஜி ஊசி போட்டுக் கொள்வதை குறிக்கிறது. பலரால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் எமோஜி பட்டாம்பூச்சி. இது இயற்கை, மாற்றம் மற்றும் அழகு போன்றவற்றை குறிக்கிறது.

Views: - 295

0

0