மஹிந்திரா பொலிரோ நியோ N10 (O) அறிமுகம் | விலை & முழு விவரங்கள் இங்கே | Mahindra Bolero Neo N10 (O)
Author: Hemalatha Ramkumar23 August 2021, 8:40 am
ஜூலை 12 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட பொலெரோ நியோ எஸ்யூவியில் மஹிந்திரா ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல் N10 (O) என்று அழைக்கப்டுகிறது.
இந்த புதிய மாடல் இப்போது ரூ.10.69 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட முந்தைய டாப்-ஸ்பெக் மாடலான N10 ஐ விட சுமார் ரூ.70,000 விலை அதிகம் ஆகும்.
மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த புதிய மாடலையும் சேர்த்துப் புதுப்பித்துள்ளது. அதில் பொலெரோ நியோ N10 (O) வேரியண்டிற்கு கூடுதலாக என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்பதை தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ வலைத்தள தகவலின்படி, இந்த புதிய மாடல் மல்டி டெரைன் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருக்கும். அதாவது N10 (O) மாடல் பொலெரோ நியோ எஸ்யூவியில் மேனுவல் லாக் டிஃபரென்ஷியல் அம்சத்தைக் கொண்டிருக்கும்.
2021 பொலெரோ நியோ ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது, இதில் நாபோலி பிளாக், மெஜஸ்டிக் சில்வர், ஹைவே ரெட், முத்து வெள்ளை, வைர வெள்ளை மற்றும் ராக்கி பழுப்பு நிறம் ஆகிய வண்ணங்கள் அடங்கும். ஆனால் N10 (O) மாடல் வைர வெள்ளைக்குப் பதிலாக முத்து வெள்ளை வண்ணத்துடன் ஐந்தில் மட்டுமே வழங்கப்படும்.
2021 பொலெரோ நியோ, இது அடிப்படையில் TUV300 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பு மற்றும் ஒரே மாதிரியான பரிமாணங்களைக் கொண்டுள்ளது.
இது 3995 மிமீ நீளம், 1795 மிமீ அகலம் மற்றும் 1817 மிமீ உயரம் கொண்டது.
இது 2,680 மிமீ வீல்பேஸ் மற்றும் குறைந்தபட்சம் 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.
ஏழு இருக்கைகள் கொண்ட எஸ்யூவி 15 அங்குல சக்கரங்களின் தொகுப்பில் நிற்கிறது.
பொலெரோ நியோ N10 (O) வேரியன்ட் அதே 1.5 லிட்டர் mHAWK டீசல் இன்ஜினுடன் வழங்கப்படும், இது 100 bhp ஆற்றலையும், 260 Nm திருப்பு விசையையும் கொண்டுள்ளது.
டிரான்ஸ்மிஷன் கடமைகள் ஐந்து வேக மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் கையாளப்படுகிறது மற்றும் தானியங்கி விருப்பம் இல்லை.
அம்சங்களின் அடிப்படையில், புதிய பொலெரோ நியோ வேரியண்டில் அதே ஏழு அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி, குரூஸ் கண்ட்ரோல், ப்ளூசென்ஸ் ஆப், ஈகோ மோட், ரியர் பார்க்கிங் அசிஸ்ட் போன்று பிற மாடல்களில் கிடைக்கும் அம்சங்கள் கிடைக்கும்.
2021 பொலெரோ நியோ வலுவான உறுதியான உடல் அமைப்பு, இரட்டை ஏர்பேக்குகள், ABS மற்றும் கார்னர் பிரேக்கிங் கன்ட்ரோல் (CBC) மற்றும் பல பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. இது ஒரு சுயாதீன முன் மற்றும் பல இணைப்பு பின்புற சஸ்பென்ஷன் அமைப்புடன் வருகிறது, காயில் ஸ்பிரிங்ஸ் மற்றும் ஸ்டெபிலைஸர் பார்ஸ் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
0
0