எச்சரிக்கை மக்களே…. வாட்ஸ்அப்பிற்கு ஆப்பு வைக்கும் ‘text bomb’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

9 September 2020, 8:53 am
Malicious Messages with Unsupported Characters Causing WhatsApp Crashes
Quick Share

கடந்த சில ஆண்டுகளில், வாட்ஸ்அப் பல பிழைகள் காரணமாக ஆண்ட்ராய்டு தொலைபேசிகள் மற்றும் ஐபோன்கள் இரண்டிலும் பலமுறை செயலிழந்துள்ளது. பிரபலமான மெசேஜிங் பயன்பாடான வாட்ஸ்அப்பை செயலிழக்கச் செய்யும் ‘TEXT BOMB’ என்ற மற்றொரு பிழை இருப்பதாக இப்போது இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.

WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, இந்த பிழை பிரேசிலில் இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரேசிலிய வாட்ஸ்அப் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட குற்றசாட்டுகளை WABetaInfo குறிப்பிட்டுள்ளது. இந்த செய்திகள் பொதுவாக வாட்ஸ்அப் செயலியால் சப்போர்ட் செய்யப்படாத எழுத்துக்களால் நிரப்பப்பட்ட vcards ஆகும். இது ஒரு புதிய பிழை எல்லாம் கிடையாது, இது பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. எனினும், வாட்ஸ்அப் இன்னும் அதை சரி செய்யவில்லை என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.

வாட்ஸ்அப் செயலியில் அதிகாரப்பூர்வ பதிப்பில் இது போன்ற சிக்கலுக்கு எந்த தீர்வும் இல்லை என்றாலும், அதிகாரப்பூர்வமற்ற வாட்ஸ்அப் Mod ஆப்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ‘க்ராஷ்கோட் பாதுகாப்பு’ (Crashcode protection) சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், உங்கள் தனியுரிமைக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் அவற்றைப் பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்க மாட்டோம்.

ஆனால், ஒரு முன்னெச்சரிக்கையாக அல்லது ஒரு தடுப்பு நடவடிக்கையாக, உங்கள் குழு தனியுரிமை அமைப்புகளை அதாவது group privacy settings உடன் சில மாற்றங்களை செய்வதன் மூலம் நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம்.

இதற்கு WhatsApp செயலியைத் திறந்து Settings க்கு செல்லுங்கள். அதில் Account என்பதையும் அடுத்து Privacy என்பதையும் தேர்வு செய்யுங்கள். இப்போது Groups என்பதில் தோன்றும் விருப்பங்களில் My Contacts என்பதை தேர்வு செய்யுங்கள்.

இதனால் வாட்ஸ்அப் செயலிழப்புக்கு வழிவகுக்கும் செய்திகளைக் கொண்ட குழுக்களில் உங்களை அறியாதவர்கள் உங்களை சேர்ப்பதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். 

ஒருவேளை, இதற்கு முன்னதாகவே இது போன்ற செய்தியை நீங்கள் பெற்றிருந்து உங்கள் வாட்ஸ்அப் சரியாக செயல்படாமல் போயிருந்தால், அதற்கான இரண்டு சாத்தியமான தீர்வுகள் உள்ளன. ஒன்று, உங்கள் போனை வாட்ஸ்அப் வெப் உடன் இணைத்து உங்கள் கணினியில் அரட்டையைத் திறந்து “text bomb” ஆக தோன்றும் செய்தியை டெலிட் செய்து விடுங்கள். நீங்கள் செய்தியை நீக்கியதும், வாட்ஸ்அப் சாதாரணமாக செயல்பட வேண்டும்.

முன்னதாக சொன்ன முறை வேலை செய்யவில்லை என்றால், வாட்ஸ்அப்பை reinstall செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இருப்பினும், நீங்கள் uninstall செய்து மீண்டும் Install செய்ய வேண்டியதில்லை. App Settings  க்குச் சென்று, Clear Data என்பதை கொடுத்தாலே போதும். அவ்வளவுதான், இதை செய்ததும் மீண்டும் பழைய backup ஐ Restore செய்து எப்போதும் போல் வாட்ஸ்அப்பை பயன்படுத்தலாம்.

Views: - 0

0

0