மணிக்கு 70 கிமீ வேகத்தில் தண்ணீரில் செல்லும் எகிப்தியர் உருவாக்கிய செம்ம கார்!

6 July 2021, 6:09 pm
Man in Egypt Builds Car That Drives on Water
Quick Share

எகிப்தின் வடக்கு கடற்கரையில் உள்ள கடற்கரைப் பயணிகளுக்காக, 29 வயதான கரீம் அமின் தனது நண்பர்களுடன் இணைந்து உயர் தொழில்நுட்பத்தினாலான தண்ணீரில் ஓடும் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இந்த வாகனம் அச்சு அசல் ஒரு கார் போலவே தோற்றமளிக்கிறது, ஆனால் இதனில் இருக்கும் செயல்பாடுகள் ஜெட் ஸ்கைஸ் போன்று இருக்கும்.

இது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது மற்றும் உங்களுக்கு பிடித்த கோடைகால தாளங்களை கேட்டுக்கொண்டே பயணிக்க புளூடூத் சரவுண்ட்-சவுண்ட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்புக்காக, இதில் GPS கண்காணிப்பு அமைப்பு உள்ளது.

இந்த மூன்று நண்பர்கள் குழு இதுவரை 12 வாகனங்களை உருவாக்கியுள்ளது, மேலும் இதற்கு ஆர்டர்களும் கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் காரின் அம்சங்களைப் பொறுத்து, கார்கள் $19,000 முதல் $44,800 வரை விலைகளைக் கொண்டிருக்கும்.

இந்த நீர் காரில் கோடைகாலத்தில் ஜாலியாக ரைடு போக செம்மையாக இருக்கும்.

Views: - 602

0

0