எதிர்பாராத வகையில் எம்ஜி ஹெக்டர் பிளஸ் கார்களின் விலைகள் உயர்ந்தது!

27 August 2020, 4:45 pm
MG Hector Plus prices hiked
Quick Share

மோரிஸ் கேரேஜஸ் கடந்த மாதம் இந்தியாவில் ஹெக்டர் பிளஸை அறிமுகப்படுத்தியது, எம்ஜி ஹெக்டர் பிளஸ் விலை ரூ.13.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). 2020 ஆகஸ்ட் 13 வரை செல்லுபடியாகும் அறிமுக விலைகளுடன் இந்த மாடல்கள்  அறிமுகப்படுத்தப்பட்டது என்று நிறுவனம் வெளிப்படுத்தியது.

எம்ஜி மோட்டார் இந்தியா இப்போது ஹெக்டர் பிளஸின் விலையை ரூ.46,000 வரை உயர்த்தியுள்ளது. பெட்ரோல் வேரியண்டில் உள்ள ஸ்டைல், ஸ்மார்ட், ஷார்ப் (MT) மற்றும் ஷார்ப் (DCT) டிரிம்களின் விலைகள் முறையே ரூ.25,000, ரூ.5,000, ரூ.10,000 மற்றும் ரூ.15,000 உயர்த்தப்பட்டுள்ளன.

டீசல் வேரியண்டின் கீழ், எம்ஜி ஹெக்டர் பிளஸின் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் டிரிம்கள் முறையே ரூ.46,000, ரூ.5,000, ரூ.5,000 மற்றும் ரூ.15,000 அதிகரித்துள்ளன. இந்த மாடல் மஹிந்திரா எக்ஸ்யூவி 500, டாடா ஹாரியர், மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் இன்னோவா கிரிஸ்டா ஆகியவற்றுக்கு போட்டியாக  இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Views: - 162

0

0