Mi TV 5X-தொடர் டிவிகள் இந்தியாவில் அறிமுகம் | ரூ.32,000 முதல் விலைகள் ஆரம்பம் | முழு விவரங்கள் இங்கே

Author: Hemalatha Ramkumar
26 August 2021, 3:27 pm
Mi TV 5X-series debuts in India; starts at Rs. 32,000
Quick Share

சியோமி இந்தியாவில் சமீபத்திய Mi TV 5X தொடர் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடரின் விலை ரூ.31,999 முதல் ஆரம்பமாகிறது மற்றும் 43 அங்குலம், 50 அங்குலம் மற்றும் 55 அங்குலம் என மூன்று வகைகளில் கிடைக்கும்.

Mi TV 5X-series debuts in India; starts at Rs. 32,000

இதன் முக்கிய சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, டிவிகளில் 4K டிஸ்பிளே, டால்பி விஷன் சப்போர்ட், 40W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பேட்ச்வால் 4 UI மற்றும் குரல் கட்டுப்பாட்டிற்காக கூகுள் அசிஸ்டென்ட் ஆகியவை உள்ளன.

Mi TV 5X தொடர் பின்புறத்தில் மெட்டல் ஃபிரேம் மற்றும் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் பெசல் இல்லாத வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இந்த டிவி 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் ஆகிய மூன்று திரை அளவுகளிலும் 4K (3840×2160 பிக்சல்கள்) ரெசல்யூஷன், 96.6% திரை-முதல்-உடல் விகிதம், டால்பி விஷன், HDR10+மற்றும் HLG ஆதரவு ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேம்பட்ட பார்வை அனுபவத்திற்காக தொலைக்காட்சிகளில் விவிட் பிக்சர் இன்ஜின் 2 அம்சம் உள்ளது.

Mi TV 5X தொடர் 64-பிட் குவாட் கோர் A55 செயலியில் இருந்து ஆற்றல் பெறுகிறது, இது மாலி-G52 MP2 GPU, 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு டிவி 10 OS அடிப்படையிலான பேட்ச்வால் 4 உடன் இயங்குகிறது.

தொலைக்காட்சிகளில் ஃபார்-ஃபீல்டு மைக்குகள், டால்பி அட்மோஸ் ஆதரவுடன் 40W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் மேம்பட்ட கேமிங் அனுபவத்திற்காக ‘ஆட்டோ லோ லேடென்சி மோட்’ உடன் வழங்கப்படுகிறது.

Mi TV 5X தொடரில் I/O போர்ட்களில் மூன்று HDMI 2.1 போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், ஒரு ஈதர்நெட் போர்ட், AV உள்ளீடு மற்றும் ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். வயர்லெஸ் இணைப்பிற்கு, தொலைக்காட்சிகள் டூயல்-பேன்ட் Wi-Fi மற்றும் ப்ளூடூத் 5.0 ஐ ஆதரிக்கின்றன.

Mi TV 5X-series debuts in India; starts at Rs. 32,000

Mi டிவி 5X தொடர் Imdb ஒருங்கிணைப்பு, 75+ இலவச நேரடி சேனல்கள், குழந்தைகள் பயன்முறை மற்றும் உலகளாவிய தேடல் அம்சம் உட்பட பல அம்சங்களை வழங்குகிறது.

இந்த வரம்பில் உள்ளமைக்கப்பட்ட Chromecast, கூகிள் அசிஸ்டன்ட் மற்றும் கூகிள் பிளே ஸ்டோருக்கான அணுகல் கிடைக்கும்.

இதனுடன் கிடைக்கும் ரிமோட் கண்ட்ரோலில் பிரபலமான OTT சேவைகளுக்காக தனியே ஹாட்கீகள் இருக்கும் மற்றும் குயிக் வேக் மற்றும் குயிக் மியூட் போன்ற செயல்பாடுகளுக்கான அணுகலும் இதனில் இருக்கும்.

Mi TV 5X தொடரின் விலை 43 இன்ச் மாடலுக்கு ரூ.31,999  ஆகவும், 50 அங்குல பதிப்பிற்கு ரூ.41,999 ஆகவும், மற்றும் 55 அங்குல மாடலுக்கு ரூ.47,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகள் செப்டம்பர் 7 முதல் Flipkart, mi.com, Mi Home மற்றும் பிற பங்குதாரர் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் வாங்க கிடைக்கும்.

Views: - 520

0

0