பெய்ரூட் நகருக்கு தனது ஆதரவை வழங்க மியா கலீஃபா புது முயற்சி! நெட்டிசன்கள் பாராட்டு! முழு விவரம் அறிக

13 August 2020, 9:09 am
Mia Khalifa Auctions Glasses From Her Adult Films To Support Lebanon
Quick Share

மியா கலீஃபா மூன்று மாதங்கள் மட்டுமே ஆபாசத் துறையில் இருந்தாலும், அவரது தாக்கம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமீப காலமாக, ஆபாச படங்கள் நடிப்பதன் மூலம் ஏற்படும் அபாயங்களைப் பற்றி வெளிப்படையாக தெரிவிப்பது மற்றும் மற்றவர்களுக்கு உதவுதல் போன்ற செயல்பாடுகள் மூலம் தனக்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பலத்தை அவர் பயன்படுத்திக்கொள்ள தொடங்கியுள்ளார்.

இப்போது, ​​லெபனானில் பிறந்து அமெரிக்கராக இருந்து வரும் இவர் கடந்த வாரம் பெய்ரூட் நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தை தொடர்ந்து பெய்ரூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதாவது தன தாய்நாட்டு மக்களுக்கு உதவ தனது சமூக ஊடக பலத்தை பயன்படுத்தியுள்ளார்.

லெபனான் செஞ்சிலுவை சங்கத்திற்கு பயனளிப்பதற்காக கலீஃபா தனது கண்ணாடியை “பிரபலமற்ற” கண்ணாடிகள் என்று குறிப்பிட்டு eBay தளத்தில் ஏலத்திற்கு முன்வைத்துள்ளார். இதுவரை 189 பேர் ஏலம் கேட்டதை அடுத்து இப்போது அந்த கண்ணடியின் மதிப்பு 100,000 டாலராக அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 75 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலம் முடிய இன்றுடன் இன்னும் நான்கு நாட்கள் உள்ளன. இந்த கண்ணாடியை, அவர் நிறைய ஆபாச படங்களில் அணிந்து நடித்துள்ளார்.

வெற்றியாளர் விரும்பினால் கண்ணாடிகளில் கையெழுத்திடுவதாகவும், அவற்றை அனுப்புவதற்கு முன்பு ஒரு போலராய்டு போட்டோ எடுத்துக் அனுப்புவதாகவும் கலீஃபா உறுதியளித்துள்ளார். 

“லெபனீஸ் மக்களுக்காக அதிக அளவிலான பணத்தைத் திரட்டுவோம்” என்று அவர் ebay தளத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவரது சமூக அந்தஸ்தையும் ஏற்கனவே இருக்கும் மிகப்பெரிய ஏல விலையையும் கருத்தில் கொண்டு பார்க்கையில், கலீஃபா தனது தாய்நாட்டுக்கு அதிக அளவிலான நிதியை வழங்குவார் என்பது தெளிவாக தெரிகிறது.

Views: - 108

0

0