ரொம்ப கம்மி விலையில 5000 mAh பேட்டரியோட மைக்ரோமேக்ஸ் IN 2b அறிமுகமாகியிருக்கு தெரியுமா?

Author: Dhivagar
30 July 2021, 3:21 pm
Micromax IN 2b launched in India
Quick Share

மைக்ரோமேக்ஸ் தனது சமீபத்திய IN-சீரிஸ் பட்ஜெட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனான IN 2b ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ரூ.7,999 விலையில் பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக ஆகஸ்ட் 6 முதல் விற்பனை செய்யப்படும்.

இதன் முக்கிய சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இந்த சாதனம் HD+ டிஸ்ப்ளே, இரட்டை பின்புற கேமராக்கள், UniSoc T610 சிப்செட் மற்றும் 5,000 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் IN 2b, வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், இரட்டை பின்புற கேமரா யூனிட் மற்றும் பாதுகாப்பிற்காக கைரேகை ரீடர் ஆகியவை உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.52 அங்குல HD+ (720×1600 பிக்சல்கள்) IPS LCD டிஸ்பிளே 20:9 என்ற திரை விகிதத்துடன் மற்றும் 400-நைட்ஸ் பிரகாசத்துடன் உள்ளது.

இது பச்சை, கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.

மைக்ரோமேக்ஸ் IN 2b 13 MP (f/1.8) முதன்மை சென்சார் மற்றும் 2 MP (f/2.4) ஆழ லென்ஸைக் கொண்ட இரட்டை பின்புற கேமரா தொகுதி கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு, 5MP (f/2.2) முன்பக்க கேமரா இருக்கும்.

மைக்ரோமேக்ஸ் IN 2b UniSoC T610 செயலியில் இருந்து ஆற்றல் பெறுகிறது, இது 6 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில், இது ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது மற்றும் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 15 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங்கை வழங்கும் என்று கூறப்படுகிறது.

இணைப்பிற்காக, சாதனம் டூயல்-பேன்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0 மற்றும் டைப்-C போர்ட்டுக்கு ஆதரவை வழங்குகிறது.

மைக்ரோமேக்ஸ் IN 2b போனின் 4GB / 64GB மாடலுக்கு ரூ.7,999 விலையும் மற்றும் 6GB / 64GB மாடலுக்கு ரூ.8,999 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக விற்பனைச் செய்யப்படும்.

Views: - 147

0

0