வெளிநாட்டு நிறுவனங்களுடன் கைகோர்க்கிறது இந்திய நிறுவனம்…கையேந்தும் சீன நிறுவனங்கள்!

15 January 2021, 2:48 pm
Micromax Manufacturing Smart Televisions For Realme, OnePlus, Infinix And More
Quick Share

மைக்ரோமேக்ஸ் நாட்டின் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்காக ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை தயாரிக்கும் பணியில் உள்ளது. உள்நாட்டு கைபேசி தயாரிப்பாளர் ஆன மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சீன நிறுவனங்களான ஒன்பிளஸ், ரியல்மீ, இன்ஃபினிக்ஸ், TCL போன்றவற்றிற்கும் BPL போன்ற நிறுவனங்களுக்கும் தொலைக்காட்சிகளைத் தயாரிப்பதாக கூறப்படுகிறது. 

மைக்ரோமேக்ஸின் தயாரிப்புக் குழுவான பகவதி ப்ராடக்ட்ஸ் லிமிடெட் மொபைல் போன்கள், நுகர்வோர் பொருட்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் பிற பிராண்டுகளுக்கான ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ஒன்பிளஸ் மற்றும் ரியல்மீ இப்போது தொலைக்காட்சிகளைத் தயாரிப்பதற்கு இந்திய நிறுவனங்களின் உதவியை நாடுகின்றன. 

இதனால் சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களிடம் கையேந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

Views: - 1

0

0