ஆப் மூலம் இயங்கும் ஸ்மார்ட் டிஃபின் பாக்ஸ் | மில்டன் பிராண்டின் புதிய அறிமுகம் | இதை நீங்க வாங்கணுமா?

22 August 2020, 10:59 am
Milton Just Launched an App Enabled Smart Tiffin
Quick Share

இந்நாளில் நீங்கள் எதை வாங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல, அது ஸ்மார்ட் சாதனமா என்பது தான் எல்லோரும் கவனிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. மதிய உணவுக்கான டிஃபின் பாக்சில் இது போன்ற ஸ்மார்ட் வசதி உள்ளதென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், மில்டன் அது போன்ற பொருளைத் தான் அறிமுகம் செய்துள்ளது. அலுவலகம் செல்லும் ஒருவருக்கு மைக்ரோவேவ் உணவுப்  பிடிக்காதெனில், இந்த ஆப் மூலம் இயங்கும் ஸ்மார்ட் டிஃபின் பாக்ஸ் பெரிய உதவியாக இருக்கும்.

திட்டமிடும் வசதி

இந்த புதிய டிஃபின் பாக்ஸை உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்க முடியும் மற்றும் இது ஆப் மூலம் உங்கள் உணவு எவ்வளவு நேரம் சூடுபடுத்தப்பட வேண்டும் என்பதைத் திட்டமிட உங்களை அனுமதிக்கிறது.

இது 30 நிமிடங்களுக்குள் உணவை சூடாக்கி 60 நிமிடங்களுக்கு சூடாக வைத்திருக்கும், எனவே நீங்கள் அதை சூடாகவும் ப்ரெஷாகவும் சாப்பிட முடியும். 

ஜியோலொகேஷன் வசதி

மேலும், நீங்கள் எங்காவது ஒரு இடத்திற்கு செல்லும்போது, சரியாக ஒரு இடத்தை சென்றடைந்தவுடன் சாப்பிட திட்டமிட்டிருந்தால், முன்கூட்டியே ஜியோலொகேஷனை (Geolocation) தேர்வு செய்து வைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் சரியாக அந்த இடத்தைச்  சென்றடையும் போது உணவு சூடாக இருப்பதை உறுதி செய்வதற்காக தானாகவே வெப்பமூட்டும் செயல்முறைத் தொடங்கியிருக்கும்.

நீங்கள் நீண்டதூர சுற்றுலாவிற்குச் செல்லும்போது இது மிகவும் உதவியானதாக இருக்கும்.

இது ஸ்மார்ட் டிஃபின் பாக்ஸ் என்பதால், இது வாய்ஸ் அசிஸ்டன்ட் உதவியுடன் வருகிறது. கூகிள் அசிஸ்டன்ட், அலெக்சா அல்லது சிரி ஆகியவற்றைப் பயன்படுத்தி அதைக் கட்டுப்படுத்தலாம். 

விலை

இந்த டிஃபின் பாக்சின் விலை ரூ.2,999 ஆகும். ஒரு டிஃபின்  பாக்ஸுக்கு இது அதிக விலையாக தெரியலாம்.

இருப்பினும், இது உங்கள் மிகப்பெரிய சிக்கலைத் தீர்க்கும் என்பதாலும், உணவைப் ப்ரெஷாக வைத்திருக்கும் என்பதாலும், இது ஏற்ற விலையாக இருக்கக்கூடும்..

அமேசானிலிருந்து மில்டன் ஸ்மார்ட் டிஃபின் பாக்ஸை வாங்க  விரும்பினால் இங்கே  கிளிக் செய்யவும்.