இந்த கோடைக்காலத்திற்கு ஏற்ற மினி ஏசி கூலர்! வெறும் 400 ரூபாய் தான்!
1 March 2021, 5:32 pmகோடை காலம் நெருங்கும் முன்னரே வெயில் வாட்டி எடுக்க துவங்கியுள்ளதால், ஏ.சி.க்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ரூ.1500 முதல் ரூ.3 ஆயிரம் விலையில் ஒரு ஏர் கூலர்களை வாங்க முடியும். அதே போல சுமார் 20 ஆயிரம் முதல் ஏ.சி.க்களை வாங்கலாம்.
ஆனால் இப்போது ஒரு கூலர் பற்றி தான் பார்க்க போகிறோம். இதன் விலை 400 ரூபாய் மட்டுந்தான். இதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், குறைந்த விலையில் யார் வேண்டுமானாலும் அதை வாங்கிவிட முடியும்.
நிறுவனம் இதற்கு ஏர் கண்டிஷனிங் கூலிங் ஃபேன் என்று பெயரிட்டுள்ளது. இது குளிர்ந்த காற்றுக்கு எந்த வகையான இயந்திரத்தையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் இதில் ஒரு ஐஸ் தட்டு உள்ளது.
இந்த ஐஸ் தட்டில், நீங்கள் ஐஸ் கட்டிகளை வைத்து கோளாறை கூலரை ஆன் செய்யும்போது, அது உங்களுக்கு குளிர்ந்த காற்றைத் தரத் தொடங்குகிறது. இது 3 முதல் 4 அடிக்கு காற்றை வீசும் பிளேடுலெஸ் இறக்கைகளையும் கொண்டுள்ளது. யூ.எஸ்.பி உதவியுடன் இந்த மிகச்சிறிய ஏ.சி.யை இயக்க முடியும்.
யூ.எஸ்.பி உடன் மின்சாரம் வழங்கவும் முடியும். மொபைல் சார்ஜர், லேப்டாப், கணினி மற்றும் பவர் பேங்க் உதவியுடனும் இதை இயக்கலாம். யூ.எஸ்.பி வழியாக உங்கள் மொபைலில் இணைத்தும் இயக்க முடியும். நீங்கள் அதை எங்கிருந்தும் எளிதாக எடுத்துச் சென்று எந்த இடத்திலும் வைத்து எளிதாக பயன்படுத்த முடியும்.
நீங்கள் இதை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வாங்கலாம். மின்சார பொருட்களை விற்கும் பல கடைகளில் இதை எளிதாகக் காணலாம். ஆனால் நீங்கள் அதை ஆன்லைனில் பெற விரும்பினால், பிளிப்கார்ட், ஈபே, அமேசான், ஸ்னாப்டீல் மற்றும் பிற இ-காமர்ஸ் தளங்களிலிருந்து எளிதாகப் பெறலாம்.
0
0