இறந்துபோன சுஷாந்த் சிங்கின் வழக்கில் பழைய வாட்ஸ்அப் மெசேஜ்களை அதிகாரிகள் படித்தது எப்படி? இதற்கு பின்னல் இருக்கும் மர்மம் என்ன?
25 September 2020, 4:06 pmஅதிகாரிகள் அல்லது காவல் துறையினர் உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களைப் படிக்க முடியுமா? நடிகை தீபிகா படுகோனே மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு 2017 ஆண்டின் வாட்ஸ்அப் அரட்டைகளின் அடிப்படையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் சம்மன் அனுப்பியபோது இந்த கேள்வி பலரின் மனதில் கண்டிப்பாக தோன்றியிருக்கும்.
இந்த அரட்டைகள் டேலண்ட் மேனேஜர் ஜெயா ஷாவின் மொபைலில் இருந்து பெறப்பட்டுள்ளன, ஆனால் கேள்வி என்னவென்றால், அழிந்துபோன இந்த மெசேஜ்கள் தொலைபேசியிலிருந்து எவ்வாறு மீட்டெடுக்கப்பட்டன?
மொபைல் குளோனிங் மூலம் இது செய்யப்பட்டிருக்கலாம் என்று பலர் நம்புகிறார்கள். மொபைல் குளோனிங் பற்றி தெரியுமா உங்களுக்கு? வாருங்கள் விவரமாக பார்க்கலாம்.
இந்த மொபைல் குளோனிங் முறை ஒன்றும் புதிய அறிவியல் அல்லது தொழில்நுட்பம் முறையோ அல்ல, ஏனெனில் இது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மொபைல் போன் குளோனிங் கடந்த பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், குளோன் செய்யப்பட்ட தொலைபேசியின் தரவு மற்றும் செல்லுலார் அடையாளம் புதிய மொபைல் தொலைபேசியில் நகலெடுக்கப்படுகின்றன. இருப்பினும், ஒருவரின் மொபைலை குளோனிங் செய்வது தனிப்பட்ட முறையில் செய்ய முடியாது. அவ்வாறு செய்வது சட்டவிரோதமானது. அரசாங்க அதிகாரிகள் பயனரின் மொபைல் தரவை அணுக தடயவியல் துறையினரின் உதவியையே நாடுகின்றனர். இந்த செயல்முறை சர்வதேச மொபைல் நிலைய கருவி அடையாளம் காணல் அதாவது International Mobile Station Equipment Identification number அதாவது IMEI எண்களை மாற்றுவதையும் உள்ளடக்கியது.
மொபைல் குளோனிங் சில நிமிடங்களில் மற்றொரு சாதனத்தில் உள்ள அனைத்து மொபைல் தரவையும் பெற உதவுகிறது. முன்னதாக, தரவை நகலெடுக்க மொபைலை கையில் வைத்திருப்பது அவசியம், ஆனால் மேம்பட்ட மற்றும் டிஜிட்டல் ஸ்மார்ட்போன்களின் உலகில், இப்போது அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. பயன்பாட்டை மட்டுமே பயன்படுத்தி தொலைபேசியைக் குளோனிங் செய்ய முடியும்.
குளோனிங் செயல்முறை முடிந்ததும், புதிய தொலைபேசியின் Cloud இல் உள்ள சமீபத்திய பேக்கப் ஸ்டோருக்குச் செல்வதன் மூலமோ அல்லது கூகிள் டிரைவிற்குச் செல்வதன் மூலமோ பழைய மொபைல் வாட்ஸ்அப் அரட்டையை அணுகலாம். ஆனால், இது உங்களிடம் எந்த மொபைல் போன் உள்ளது என்பதைப் பொறுத்தது.
மொபைலின் காப்புப்பிரதி தொலைபேசி எண் மற்றும் கூகிள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் தனது FAQ பிரிவில் கூறியுள்ளது. உங்கள் காப்புப்பிரதியிலிருந்து யார் வேண்டுமானாலும் மெசேஜ்களை எளிதாக அணுகலாம் என்பதே இதன் பொருள். எனவே, போன் குளோனிங் மூலம் தான் சமீபத்திய வாட்ஸ்அப் மெசேஜ்கள் மீட்டெடுக்கப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.