Moj App | 6 மாதத்தில் அசால்டாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய மோஜ் ஆப்!

20 January 2021, 12:06 pm
Moj App surpasses 100 mn downloads on Google Play Store
Quick Share

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட குறுகிய வீடியோ தளமான மோஜ், கூகிள் பிளே ஸ்டோரில் 100 மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டி புதிய மைக்கல்லை எட்டியுள்ளது. இந்த மிகப்பெரிய மைல்கல்லை வேகமாக எட்டிய குறுகிய வீடியோ தளமாக மோஜ் ஆப் உருவெடுத்துள்ளது. டிக்டாக் (இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது) மற்றும் உள்நாட்டு சிங்காரி பயன்பாடு ஆகியவை மோஜ் ஆப்பின் சிறந்த போட்டிகளாக பார்க்கப்படுகிறது.

“மேம்பட்ட அம்சங்களுடன், மோஜ் ஆப் அதன் பயனர்களின் சமூகத்தை சக்திவாய்ந்த படைப்புக் கருவிகளுடனும், வலுவான எடிட்டிங் திறன்களுடன், ஒரு பரந்த இசை நூலகத்துடனும், கேமரா ஃபில்டர்களுடன் அதிக ஈடுபாட்டுடன் மற்றும் பொழுததுபோக்குத் தளமாகவும் வைத்திருக்கிறது” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிறுவனம் மேலும் கூறுகையில், “மோஜ் அதன் உயர்தர படைப்பாளரின் சுற்றுச்சூழல் அமைப்பை வொர்க்ஷாப்ஸ், பயிற்சி போன்றவற்றை ஏற்பாடு செய்வதன் மூலம் ஊக்குவிப்பதோடு, அவர்கள் வெற்றிபெறவும் உதவுகிறது” என்றும் தெரிவித்துள்ளது.

ஜூலை 1, 2020 அன்று கூகிள் பிளே ஸ்டோரில் மோஜ் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் சிறந்த குறுகிய வீடியோ ஆப் ஆக தொடர்ந்து இடம் வகித்து வருகிறது. IOS இல் மிகவும் பிரபலமாக இருப்பதால், ஆப் ஸ்டோரில் முதல் 10 சமூக வலைப்பின்னல் பயன்பாடுகளில் மோஜ் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில், இது கூகிள் பிளே ஸ்டோரால் 2020 ஆம் ஆண்டின் ‘சிறந்த வேடிக்கை ஆப்’ ஆக அங்கீகரிக்கப்பட்டது.

டிக்டாக் இந்தியாவில் தடைச் செய்யப்பட்டுள்ளதன் காரணமாக மாதாந்திர அடிப்படையில் 80 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தொடர்ந்து செயலில் இருந்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Views: - 12

0

0