புதிய அம்சங்களுடன் Motorola Edge 2021 மீண்டும் அறிமுகம் | விலை & முழு விவரங்கள் இங்கே
Author: Hemalatha Ramkumar21 August 2021, 9:08 am
மோட்டோரோலா தனது எட்ஜ் 20 தொடரை இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் விரிவுபடுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் மோட்டோரோலா எட்ஜ் 20 தொடரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
நிறுவனம் இப்போது மோட்டோரோலா எட்ஜ் 2021 என்று அழைக்கப்படும் மோட்டோரோலா எட்ஜ் புதிய மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.
சாதனம் மோட்டோரோலா எட்ஜ் 20 லைட்/ஃப்யூஷனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பு போல் தெரிகிறது ஆனால் சற்று வித்தியாசமான விவரக்குறிப்புகளை கொண்டுள்ளது. இதன் விலை $699 (தோராயமாக ரூ.52,000) ஆகும். இதன் விற்பனை குறித்து எந்த தகவலும் இல்லை.
மோட்டோரோலா எட்ஜ் 2021 விவரக்குறிப்புகள்
- மோட்டோரோலா எட்ஜ் 2021 லைட் 6.7/8-இன்ச் FHD+ 8-பிட் LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
- இதன் டிஸ்பிளே HDR10, 576Hz தொடுதல் மாதிரி விகிதம் மற்றும் 144Hz புதுப்பிப்பு விகித ஆதரவைக் கொண்டுள்ளது.
- எட்ஜ் 2021 குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G SoC உடன் 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது.
- பின்புற கேமராக்களில், 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8MP 119 ° அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவை உள்ளது.
- முன்பக்கத்தில், 32 MP செல்ஃபி கேமரா உள்ளது.
- புதிய எட்ஜ் 2021 ஸ்மார்ட்போன் 30 W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். தொலைபேசி My UX உடன் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது.
- ஃபிஷிங் தாக்குதல்களைத் தடுக்க மொபைல் பாதுகாப்பிற்காக திங்க்ஷீல்டு ஆதரவையும் தொலைபேசியில் கொண்டுள்ளது.
- இது 5 ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, NFC மற்றும் GPS இணைப்பையும் பெறுகிறது. மேலும், தொலைபேசி IP52 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. தொலைபேசி 169 x 75.6 x 8.99 மிமீ அளவுகளையும் மற்றும் 200 கிராம் எடையையும் கொண்டது.
நினைவுகூர, மோட்டோரோலா எட்ஜ் 20 லைட்/ஃப்யூஷன் 6.67 இன்ச் 10-பிட் OLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. DCI P3 வண்ண வரம்பு, HDR 10+ மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகித ஆதரவு ஆகியவற்றைப் பெறுகிறது. எட்ஜ் 20 லைட் 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் டைமென்சிட்டி 720 SoC ஆல் இயக்கப்படுகிறது. மேலும், 108 MP குவாட் கேமரா அமைப்பு உடன் உள்ளது.
0
0