Motorola Edge S | அறிமுகத்திற்கு முன்னதாக மோட்டோரோலா எட்ஜ் S முன்பதிவுகள் துவக்கம்

23 January 2021, 5:55 pm
Motorola Edge S pre-order goes live ahead of launch
Quick Share

மோட்டோரோலா ஜனவரி 26 ஆம் தேதி எட்ஜ் S ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, ஸ்மார்ட்போன் சீனாவில் முன்பதிவு செய்ய கிடைக்கிறது.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் மோட்டோரோலா எட்ஜ் S முன்பதிவு செய்ய JD.com தளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் படம் எதுவும் வெளியாகவில்லை, ஆனால் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5g சிப்செட் உடன் இது இயங்கும் என்பது டீஸர்களின் மூலம் தெரியவந்துள்ளது. இது குவால்காமின் சமீபத்திய சிப்செட் மற்றும் மோட்டோரோலா எட்ஜ் S செயலியுடன் அறிமுகப்படுத்தப்படும் முதல் ஸ்மார்ட்போன் ஆகவும் இருக்கும். ஸ்மார்ட்போனின் வெளியீடு CST நேரப்படி ஜனவரி 26 அன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது, இது இந்திய வாடிக்கையாளர்களுக்கு மாலை 5:00 மணி  முதல் நிகழும்.

ஸ்னாப்டிராகன் 870 செயலியைத் தவிர, மோட்டோரோலா எட்ஜ் S 6.7 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே 105 Hz புதுப்பிப்பு வீதத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜை வழங்கும். மோட்டோரோலா எட்ஜ் S 5,000 mAh பேட்டரியை பேக் செய்வதாகவும் வதந்தி பரவியுள்ளது.

இது பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும், அதில் ஜூம் வசதிக் கொண்ட 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் ஆகியவை அடங்கிய இரட்டை செல்பி கேமராக்களும் இடம்பெறும். மோட்டோரோலா எட்ஜ் S ஒரு பக்கமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டிருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் முன்பு மோட்டோரோலா நியோ என்று வதந்திகள் பரவியது, ஆனால், இப்போது இது மோட்டோரோலா எட்ஜ் S என்று கூறப்படுகிறது. இது மற்றொரு ‘பெரில்’ வண்ண விருப்பத்தில் வரும் என்று கூறப்படுகிறது. வெளியீட்டு தேதிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது, எனவே மோட்டோரோலா எட்ஜ் S பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Views: - 0

0

0