ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் உடன் Motorola Edge S Pro அதிகாரப்பூர்வ அறிமுகம் | விலை & விவரங்கள்
Author: Hemalatha Ramkumar7 August 2021, 11:13 am
மோட்டோரோலா புதிய எட்ஜ் S ப்ரோ மாடலை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது CNY 2,399 (தோராயமாக ரூ. 27,500) ஆரம்ப விலை-குறியைக் கொண்டுள்ளது மற்றும் ஆகஸ்ட் 10 முதல் விற்பனைக்கு வரும்.
முக்கிய சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, சாதனம் 144Hz OLED டிஸ்ப்ளே, மூன்று பின்புற கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மற்றும் 30W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
மோட்டோரோலா எட்ஜ் S ப்ரோ போனின் வடிவமைப்பு எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனைப் போலவே இருக்கும். இது மெல்லிய பெசல் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்ட பஞ்ச்-ஹோல் வடிவமைப்பு ஆகியவற்றை கொண்டிருக்கும்.
இந்த கைபேசியில் 6.7 இன்ச் முழு HD+ (1080×2400 பிக்சல்கள்) OLED திரை 20:9 விகிதத்தில், 144 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் HDR 10+ ஆதரவு ஆகியவற்றை கொண்டிருக்கும். இது மூன்று வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.
எட்ஜ் S ப்ரோ 108 MP (f/1.9) மெயின் சென்சார், 16 MP (f/2.2) அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 8 MP (f/3.4) பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஸ்னாப்பர் 5x ஆப்டிகல் மற்றும் 50x டிஜிட்டல் ஜூம் ஆதரவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்னால், இது 16MP (f/2.2) செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் S ப்ரோ ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது, இதில் 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.
உட்புறத்தில், இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MYUI 2.0 இல் இயங்குகிறது மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,520mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
இணைப்பிற்காக, சாதனம் வைஃபை 6, ப்ளூடூத் 5.1, GPS, NFC, 5ஜி மற்றும் டைப்-C போர்ட்டிற்கான ஆதரவு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மோட்டோரோலா எட்ஜ் S புரோ போனின் அடிப்படை 6 ஜிபி/128 ஜிபி மாடலுக்கு CNY 2,399 (தோராயமாக ரூ.27,500) விலையும் மற்றும் டாப்-எண்ட் 12 ஜிபி/256 ஜிபி மாடலுக்கு CNY 3,299 (சுமார் ரூ.37,800) விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கைபேசி லெனோவா நிறுவனத்தின் சீன இணையதளம் வழியாக முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக உள்ளது.
0
0