5ஜி ஆதரவுடனான மோட்டோரோலா இபிசா ஸ்மார்ட்போன்! முக்கிய விவரங்கள் வெளியானது
5 February 2021, 6:15 pmஇந்த ஆண்டின் தொடக்கத்தில், மோட்டோரோலாவின் சில புதிய ஸ்மார்ட்போன்கள் தொடர்பான அறிக்கைகள் வெளியாகின. குறிப்பிடத்தக்க வகையில், இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் குறியீட்டு பெயர்கள் நியோ, இபிசா மற்றும் கேப்ரி என்று நம்பப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அறிக்கையின்படி, மோட்டோரோலா நியோ ஸ்னாப்டிராகன் 865 SoC ஆல் இயக்கப்படுகிறது, இது ஒரு உயர்நிலை மாடலாக இருக்கும். மறுபுறம், மோட்டோரோலா கேப்ரி மற்றும் கேப்ரி பிளஸ் 4ஜி இணைப்பை ஆதரிக்கும் இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இறுதியாக, மோட்டோரோலா இபிசா பற்றிப் பேசும்போது, இது ஸ்னாப்டிராகன் 400 செயலியைக் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கக்கூடும்.
மோட்டோரோலா இபிசா – ஜீக்பெஞ்ச் பட்டியல் தோற்றம்
இப்போது, மோட்டோரோலா இபிசா என்று கூறப்படும் ஒரு சாதனம் ஜீக்பெஞ்ச் தரப்படுத்தல் தளத்தில் காணப்பட்டுள்ளது. கசிந்த பெஞ்ச்மார்க் பட்டியலின், இபிசா XT2137-2 என்ற மாடல் எண்ணைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மதர்போர்டு கூட இபிசா குறியீட்டு பெயரைக் கொண்டுள்ளது.
பெஞ்ச்மார்க் பட்டியல் விரிவாக்கத்தின்படி, சாதனம் ஆண்ட்ராய்டு OS இன் சமீபத்திய மாடலாக இருக்கும் என்று தெரிகிறது, இது ஆண்ட்ராய்டு 11 ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலியுடன் இயங்கும். 5ஜி இணைப்பை ஆதரிக்கும் மலிவான குவால்காம் சிப்செட் என்பதால் இது ஸ்னாப்டிராகன் 480 SoC இலிருந்து ஆற்றலைப் பெறும் என்று எதிர்பாக்கப்படுக்கிறது.
இப்போதைக்கு, விவோ Y31s மற்றும் ஓப்போ A93 5ஜி ஆகியவை பட்ஜெட் 5 ஜி SoC ஆல் இயக்கப்படுகின்றன. இந்த செயலியையே 6 ஜிபி ரேம் உடன் இபிசா பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்திறனைப் பொறுத்தவரை, மோட்டோரோலா இபிசா ஒற்றை கோர் சோதனையில் 2466 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 6223 புள்ளிகளையும் பெற்றதாகத் தெரிகிறது.
0
0
1 thought on “5ஜி ஆதரவுடனான மோட்டோரோலா இபிசா ஸ்மார்ட்போன்! முக்கிய விவரங்கள் வெளியானது”
Comments are closed.