இதுவரைக்கும் மோட்டோரோலா போன் மட்டும்தான பாத்திருக்கீங்க… இந்த முறை அதுக்கும் மேல…!

30 September 2020, 5:18 pm
Motorola Razr 5G India Launch Teased
Quick Share

மோட்டோரோலா தனது இரண்டாவது ஜென் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான மோட்டோரோலா ரேஸ்ர் 5ஜி ஐ இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இது சிறந்த கேமராக்கள், புதிய 5ஜி-இயக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் அதிக நீடித்த வடிவமைப்புடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்போது, இந்தியாவில் மோட்டோரோலா ரேஸ்ர் 5ஜி போனின் அறிமுகம் குறித்து நிறுவனம் முன்னோட்டங்களை வெளியிட துவங்கியுள்ளது.

சென்ற வார இறுதியில் அதிகாரப்பூர்வ ட்வீட்டில் மோட்டோரோலா இந்தியாவுக்கான ரேஸ்ர் 5ஜி போனுக்கான அறிமுகம் குறித்த முன்னோட்டத்தை வெளியிட்டது. நிறுவனம் ஒரு குறுகிய வீடியோ டீஸரைப் பகிர்ந்து கொண்டது. அதில் ஒரு மடிக்கக்கூடிய தொலைபேசியைத் தவிர மேலும் பல சாதனங்களின் அறிமுகம் குறித்து தெரிவித்திருந்தது. மோட்டோரோலா புதிய ஸ்மார்ட் டிவிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தனது ஸ்மார்ட் ஹோம் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தவும் பார்க்கிறது. இந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்காக பிளிப்கார்ட்டுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்துள்ளது.

வெளியான வீடியோ டீஸரில் ஸ்மார்ட் டிவியின் தோற்றம், ஃபிரண்ட் லோடிங் சலவை இயந்திரம், டபுள் டோர் குளிர்சாதன பெட்டி மற்றும் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனர் ஆகியவற்றைக் காணலாம். இந்த தயாரிப்புகள் அனைத்தையும் மோட்டோரோலா எப்போது வெளியிடப் போகிறது என்பதற்கான சரியான வெளியீட்டு தேதி இல்லை, ஆனால் பண்டிகை காலத்திற்கான நேரத்தில் அவை வெளியாகும் என்று வீடியோ தெரிவிக்கிறது, அதாவது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்புகள் உண்டு.