MSI பிராண்டின் E13 Flip Evo, E16 Flip லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் | விலை & அம்சங்கள் இதோ

3 April 2021, 3:11 pm
MSI E13 Flip Evo, E16 Flip laptops launched in India
Quick Share

MSI தனது புதிய வணிக வரிசையில் இரண்டு புதிய மடிக்கணினிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்கள்  E13 Flip Evo மற்றும் E16 Flip என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய கன்வெர்ட்டிபிள் நோட்புக் லேப்டாப்கள் இன்டெல் டைகர் லேக் செயலிகள் உடன் இயக்கப்படுகின்றன மற்றும் 16:10 என்ற திரை விகிதத்துடன் வருகின்றன. இரண்டு மாடல்களும் MSI யின் தனியுரிம MPP 2.0 ஸ்டைலஸ் உடன் (MSI Pen) இணக்கமாக உள்ளன.

மற்ற தொடர்களைப் போலவே, இரண்டு மாடல்களும் தொலைதூர மீட்டிங்களுக்காகவே பிரயத்தியேக வடிவமைக்கப்பட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் சத்தம் குறைக்கும் “Noise-Reduction” கேமரா மற்றும் ஆடியோ இரைச்சல் ரத்து செய்யும் அம்சம் ஆகியவையும் உள்ளது. இந்த நோட்புக் லேப்டாப்கள் 20 மணிநேர பேட்டரி லைஃப் வழங்கும் என்று கூறுகிறது. 

புதிய லேப்டாப்களில் புளூடூத் 5.2 உள்ளது, மேலும் போர்ட் தேர்வில் சார்ஜிங் திறன்களைக் கொண்ட இரண்டு தண்டர்போல்ட் 4 கனெக்டர்ஸ், ஒரு யூ.எஸ்.பி-C 3.2 மற்றும் யூ.எஸ்.பி-A 3.2 மற்றும் ஆடியோ காம்போ ஜாக் ஆகியவை அடங்கும்.

E13 Flip Evo லேப்டாப் 13.4 இன்ச் 1920 x 1200 தொடுதிரைடன் வருகிறது, இது 14.9 மிமீ தடிமன் மற்றும் 1.35 கிலோகிராம் எடை கொண்டது. E16 Flip ஒரு பணிநிலைய சாதனமாகத் தெரிகிறது.

தற்போது E13 Flip விலை $1,599.99 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், E16 Flip லேப்டாப்பின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Views: - 1

0

0