கார்ப்பரேட் துறைக்கு 1 மாத இலவச இணைய சேவை வழங்கும் MTNL | முழு விவரம் உள்ளே

26 March 2020, 6:30 pm
MTNL provides 1-month free access to corporate sector for work from home
Quick Share

அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல் வியாழக்கிழமை தனது நிறுவன வாடிக்கையாளர்களின் ஊழியர்களுக்கு அலுவலக சேவையகங்களுக்கு இலவச அணுகலை வழங்கத் தொடங்கியது. MTNLலின் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களின் ஊழியர்கள் அதன் பிராட்பேண்ட் இணைப்பைப் பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு இந்த சேவையை இலவசமாகப் பெற முடியும் என்று MTNL தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுனில் குமார் PTI அளித்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

“பல நிறுவனங்கள் MTNL MPLS நெட்வொர்க்கில் அவற்றின் முக்கிய சேவையகத்தைக் கொண்டுள்ளன. எம்.டி.என்.எல் பிராட்பேண்ட் கொண்ட இத்தகைய நிறுவனங்களின் ஊழியர்களை எம்.டி.என்.எல் VPNoBB (Virtual Private Network Over Broadband) மூலம் இயக்க முடியும். இதன் மூலம் அவர்கள் தங்கள் அலுவலக சேவையகங்களை அணுகலாம். இது ஒரு பாதுகாப்பான ஊடகமாக இருக்கும் ,” என்றார் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பு தங்கள் பணியைச் செய்வதற்கு தங்கள் நிறுவனம் அலுவலகத்தில் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் அணுகலை வழங்கும் என்றார். “இதைப் பயன்படுத்தி, கார்ப்பரேட் ஊழியர்கள் அவர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். இது அவர்களின் வீட்டிற்கு அலுவலகத்தை மாற்றுவதாக இருக்கும். அணுகல் வரம்புகள் இல்லை. எம்.டி.என்.எல் இந்த வசதியை ஒரு மாதத்திற்கு கூடுதல் கட்டணம் இல்லாமல் வீட்டிலிருந்து எளிதாக வேலைகளை செய்வதற்காக  நீட்டிக்கும்” என்று அவர் கூறினார்.

பொதுவாக, MTNL அதன் நெட்வொர்க்கில் அமைந்துள்ள கார்ப்பரேட் சேவையகங்களை அணுக ஒரு இணைப்புக்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.