மார்ஸ் மாதிரியில் தங்குவதற்கு நாசா அழைப்பு

22 May 2020, 4:41 pm
nasa-will-pay-us-citizens-to-spend-eight-months-inside-a-mock-spacecraft-to-mars
Quick Share

மனிதன் நிலவில் கால் வைத்த நாளில் இருந்தே பிற கிரகங்களிலும் மனிதர்கள் வாழ வழி உள்ளதா என்பதை தேட ஆரம்பித்து விட்டனர் ஆராய்ச்சியாளர்கள். தற்போது விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் குறிக்கோள் மார்ஸ் கிரகம் தான். மனிதர்களுக்காக பூமியில் இருந்து வெளியே அமைக்கப்படும் முதல் இடம் இது தான். ஆனால் மார்ஸ் கிரகத்திற்கு செல்ல இருக்கும் பயணம் சாதாரணமானதாக இருக்காது. 

இந்த நீண்ட பயணத்தின் போது  விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் அனுபவிக்க இருக்கும் விளைவுகளை அறிய நாசா நிறுவனம் தன்னார்வலர்களை தேடி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வலர்கள் பூட்டி கிடக்கும் போலியான ஸ்பேஸ்கிராஃப்டினுள் எட்டு மாதங்கள் கழிக்க வேண்டும்.

“தன்னம்பிக்கை அதிகம் கொண்ட 30 – 55 வயதிற்கு உட்பட்ட, ரஷ்யன் மற்றும் ஆங்கிலம் நன்கு அறிந்த அமெரிக்க குடிமக்கள் தேவைப்படுகிறார்கள். தகுதி: M.S., Ph.D., M.D., ஆகிய படிப்பு கொண்டவர்கள் அல்லது இராணுவ பயிற்சி முடித்த நபர்கள். பட்டப்படிப்பு அல்லது வேறு ஏதேனும் படிப்பு இருந்தாலும் எடுத்து கொள்ளப்படுவார்கள்.” என்ற அறிக்கையை நாசா தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் நடைபெற உள்ளது. பூட்டிய ஒரு அறையினுள் இருக்க  ஆறு தன்னார்வலர்களை நாசா நிறுவனம் எதிர்ப்பார்க்கிறது. உங்களுக்கு தெரியவில்லை எனில் மார்ஸ் கிரகமானது ஸ்பேஸ்கிராஃப்ட் மற்றும் அதன் வேகத்தை பொருத்து 150 – 200 நாட்கள் முன்னிலையில் உள்ளது.

இந்த கிரகத்தில் நீண்ட நாட்கள் தங்கினால் என்ன மாதிரியான விளைவு ஏற்படும் என்பதை அறிவதற்காகவே இந்த ஆய்வு. இந்த பயணத்தின் போது வெர்சுவல் ரியாலிட்டியை பயன்படுத்தி பல விதமான ரோபோடிக் வேலைகளை செய்ய உள்ளனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆய்வு மூலம் வர இருக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என முன்கூட்டியே தயார் ஆவார்கள். அதற்கான பதில்களையும் முன்கூட்டியே கண்டுபிடித்து கொள்ளலாம்.

Leave a Reply