கடைசி நேரத்தில் நாசாவின் கல்பனா சாவ்லா விண்கல பயணம் ஒத்திவைப்பு!

Author: Dhivagar
2 October 2020, 10:09 am
NASA's launch of Cygnus spacecraft, named after Kalpana Chawla, scrubbed just 2 minutes before liftoff
Quick Share

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக நாசாவின் சார்பின் சிக்னஸ் கார்கோ விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட இருந்தது. இந்த விண்கலத்துக்கு இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் விண்வெளி வீராங்கனை ஆன கல்பனா சாவ்லா அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. நாசா வாலோப்ஸ் விமான நிலையத்திருந்து ஏவப்பட திட்டமிடப்பட்ட சிக்னஸ் விண்கலம், கண்டறியப்படாத சிக்கல் காரணமாக லிப்டாஃப் செய்வதற்கு சுமார் 2 நிமிடங்கள் 40 வினாடிகள் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டது.

சிக்னஸ் விண்கலம் ஏறக்குறைய 8,000 பவுண்டுகள் சரக்குடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பொருட்களை ஏற்றிச் செல்லும் அன்டாரஸ் ராக்கெட் உடன் இரவு 9:43 EDT மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. 

நாசாவின் வர்த்தக சரக்கு வழங்குனரான நார்த்ரோப் கிரம்மனின் அன்ட்ரேஸ் ஏவுகணை, விண்கலத்தை சுமந்துக்கொண்டு விண்ணில் பாய தயாராக இருந்தது. ஆனால், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால், இந்த ஏவுதல் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

விண்வெளியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நவீன கழிப்பறை, கம்ப்யூட்டர் சாதனங்கள், விர்ச்சுவல் கேமரா, பரிசோதனைக் கருவிகள்  போன்று 8,000 பவுண்டுகள் எடைக்கொண்ட பலதரப்பட்ட சாதனங்களை இந்த விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு அக்டொபர் 4 ஆம் தேதி இந்த விண்கலம்  விண்வெளி மையத்தை சென்றடையும் என்று நாசா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 46

0

0