செவ்வாய் கிரகத்தில் மினி-ஹெலிகாப்டரை பறக்கவிடும் பெர்சவரன்ஸ் ரோவர்!

Author: Dhivagar
24 March 2021, 6:16 pm
NASA's Mars Rover Perseverance Is Set to Fly a Mini-Helicopter on Red Planet
Quick Share

முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் இன்ஜெனியூட்டி (Ingenuity) என்ற மினி ஹெலிகாப்டரை பறக்கவிட தயாராக உள்ளது, அது செவ்வாய் கிரகத்தை பறந்தபடி ஆராயும். டெப்ரிஸ் ஷீல்டை தரையிறக்கிய பிறகு, செவ்வாய் கிரகத்தின் இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டரை இயக்க அடுத்த இரண்டு நாட்கள் பெர்சவரன்ஸ் முயற்சிகளை மேற்கொள்ளும்.

நான்கு பவுண்டுகள் எடையுடன், நான்கு பிளேடுகள் கொண்ட ரோட்டார் கிராஃப்ட் முதல் சோதனை விமானம் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் ஆய்வைத் தொடங்கும் என்று  எதிர்பார்க்கப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.

இன்ஜெனியூட்டி மற்றும் நாசாவின் செவ்வாய் கிரகத்திற்கான 2020 பெர்சவரன்ஸ் ரோவரை இயக்கும் குழு, ஒரு குறிப்பிட்ட  விமான மண்டலத்தைத் தேர்வுச் செய்துள்ளது. அங்கு ஹெலிகாப்டர், கட்டுப்படுத்தப்பட்ட பறக்கும் முயற்சியில் ஈடுபடும்.

பெர்சவரன்ஸ் – பிப்ரவரி 18 அன்று ஜெசெரோ கிரேட்டர் பகுதியில் தரையிறங்கியது.

இன்ஜெனியூட்டி என்பது ஒரு தொழில்நுட்ப சோதனை ஆகும், இது 31 நாட்கள் வரை (30 செவ்வாய் கிரக நாட்கள்) வரையறுக்கப்பட்ட சோதனை பறக்கும் திறன் கொண்டுள்ளது.

நாசாவின் இன்ஜெனியூட்டி மினி ஹெலிகாப்டர், மனிதர்களால் உருவாக்கப்பட்டு மற்றொரு கிரகத்தில் இயங்கக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட விமானம் ஆகும்.

இந்த சோதனை விமான சோதனைத் திட்டம் வெற்றிபெற்றால், கிடைக்கும் தரவுகள் செய்வாய் கிரகத்தின் எதிர்கால ஆய்வுகளுக்கு விண்வெளி வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாசா கருதுகிறது.

Views: - 108

0

0