பாஸ்வேர்டு வைக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!
23 February 2021, 2:39 pmஸ்மார்ட்போன்களில், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஜிமெயில் போன்ற பல பயன்பாடுகளைப் பயன்படுத்துகிறோம், ஆனால் அவற்றுக்கான கடவுச்சொற்களை (Passwords) வைக்கும்போது, நாம் விரும்பும் ஏதாவது ஒரு வார்த்தையையே அல்லது எண்ணையோ பாஸ்வேர்டாக வைத்துவிடுகிறோம். ஆனால் நீங்கள் அப்படி எல்லாம் பாஸ்வேர்டு வைத்தால் ஹேக்கர்கள் அதை எளிதாக ஹேக் செய்துவிட முடியும். நீங்கள் ஒரு வலுவான கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுக்க எண்கள், எழுத்துக்கள், ஸ்பெஷல் கேரக்டர்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
வலுவான கடவுச்சொல்லை உருவாக்கும் போது நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய சில டிப்ஸ் அல்லது சில முக்கியமான விஷயங்களை இப்போது நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
1) புதிய கடவுச்சொல்லை அமைக்கும் போது, வேறு ஏதேனும் ஒரு பயன்பாட்டிற்கு நீங்கள் பயன்படுத்திய கடவுச்சொல்லை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், உங்களின் ஏதேனும் ஒரு சமூக வலைத்தள கணக்கு ஹேக் செய்யப்பட்டால் மற்ற கணக்குகளும் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
2) கடவுச்சொல்லை உருவாக்க உங்கள் குடும்பத்தினர் பெயரையோ அல்லது உங்கள் பெயரையோ பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் ஹேக்கர்கள் அதை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள் மற்றும் உங்கள் ATM PIN போன்றவற்றையும் கடவுச்சொல்லாக வைக்கக்கூடாது.
3) பிறந்த நாள், ஆண்டு, தேதி ஆகியவற்றையும் கடவுச்சொல்லாக பயன்படுத்த வேண்டாம். இதுவும் எளிதில் கண்டுபிடிக்கக்கூடியதுதான்
4) கடவுச்சொல்லை ஆன்லைனில் சேமிக்கக்கூடாது, இமெயில் டிராஃப்ட் வடிவில் கூட அதை சேமித்து வைக்கக்கூடாது. முடிந்தால் எதுவும் குறிப்பிடாமல் அதை ஒரு சீட்டில் எழுதி வைத்துக்கொள்ளலாம் அல்லது உங்கள் டைரியில் யாருக்கும் தெரியாதவாறு எழுதி வைத்துக்கொள்ளலாம்.
5) கடவுச்சொல்லை நீங்கள் அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரே பாஸ்வேர்டு நீண்ட காலமாக இருந்தால் ஹேக்கர்கள் அதை ஈசியாக கண்டுபிடித்துவிடக்கூடும்.
0
0