புதுசா வரப்போற Aprilia SXR 125 ஸ்கூட்டர் விலை எவ்ளோ தெரியுமா? இங்க தெரிஞ்சிக்கோங்க
8 April 2021, 1:21 pmபியாஜியோ விரைவில் இந்தியாவில் ஏப்ரிலியா SXR 125 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது. இப்போது வரை கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த மேக்ஸி-ஸ்கூட்டரின் விலை ரூ.1.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனம் கடந்த வாரம் ஏப்ரிலியா ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளைத் தொடங்கியது, இது பியாஜியோ ஷோரூம்களிலும் அமேசான் மூலமாகவும் செய்யப்படலாம். முன்பதிவு செய்ய வாடிக்கையாளர் ரூ.5000 டோக்கன் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
அதன் முந்தைய மாடலைப் போலவே, SXR 125 மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் சிறப்பான ஒரு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது ட்வின்-பாட் LED ஹெட்லைட், LED டெயில்லைட், முழு டிஜிட்டல் கிளஸ்டர், ஒரு வசதியான ஷேடில், சரிசெய்யக்கூடிய பின்புற சஸ்பென்ஷன் மற்றும் CBS உடன் முன் டிஸ்க் பிரேக் போன்ற அம்சங்களைப் பெறுகிறது. புளூடூத் இணைப்பு அம்சம் ஒரு கூடுதல் விருப்பமாக கிடைக்கும்.
இந்த ஸ்கூட்டரை இயக்குவது 125 சிசி ஒற்றை சிலிண்டர் இன்ஜின் ஆகும், இது 7600 rpm இல் மணிக்கு 9.4 bhp மற்றும் 9.2 Nm உச்ச திருப்புவிசையை உற்பத்தி செய்கிறது. SXR 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் CVT கியர்பாக்ஸில் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஏப்ரிலியா SXR 125 சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் உடன் போட்டியிடுகிறது. ஆனால், ஒப்பிடுகையில் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மிகவும் மலிவானது. இந்த விலை நிர்ணயம் ஸ்கூட்டருக்கு பின்னடைவாக இருக்குமா, இல்லை நல்ல வரவேற்பைப் பெறுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
0
0