ஓலா மின்சார ஸ்கூட்டர் வெளியீடு பற்றிய முக்கிய விவரங்கள் உங்களுக்காக | வெளியீட்டு நேரம், விலை & விவரங்கள்

Author: Hemalatha Ramkumar
13 August 2021, 1:15 pm
New details emerge on upcoming Ola electric scooter ahead of August 15 launch
Quick Share

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பேட்டரி மூலம் இயங்கும் தனது முதல் வாகனத்தை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது. தற்போதுவரை ஸ்கூட்டரின் முன்பதிவுகளை ரூ.499 தொகைக்கு நிறுவனம் ஏற்றுக்கொண்டு வருகிறது.

  • வாடகை சவாரி நிறுவனமாக இருந்து வந்த ஓலா, இப்போது மின்சார வாகன தயாரிப்பாளராகவும் புதிய வணிகத்தில் இறங்கியுள்ளது. 
  • தனது முதல் வணிகத்திலேயே, உலகின் அதிக முன்பதிவு செய்யப்பட்ட மின்சார ஸ்கூட்டர் என்ற பெருமையை எட்டியுள்ளது. முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றதாக ஓலா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
  • நிறுவனம் சமீபத்தில் அதன் வரவிருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார ஸ்கூட்டர் பற்றிய கூடுதல் விவரங்களையும் வெளியிட்டது. அதன் ஓலா தனது ஸ்கூட்டர் Reverse Mode உடன் வரும் என்று அறிவித்துள்ளது. 
  • இந்த அம்சத்தின் உதவியுடன் நெருக்கமான பார்க்கிங் இடங்களிலும் கூட பயனருக்கு உதவியாக இருக்கும் வகையில், வாகனத்தை கையாள மற்றும் நிறுத்த வசதியாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ஓலா அதன் மின்சார ஸ்கூட்டர் குறித்த சில முக்கிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளையும் தெரிவித்துள்ளது. அதன்படி, ஓலா ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கி.மீ. லிட்டர் பயண வரம்பு கிடைக்கும். 
  • இது 10 விதமான பல்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். 
  • இந்த ஸ்கூட்டரின் பரிமாண விவரங்களைப் பொறுத்தவரை, ஸ்கூட்டர் 1,860 மிமீ நீளம், 700 மிமீ அகலம் மற்றும் ஒட்டுமொத்த உயரத்தின் அடிப்படையில் 1,155 மிமீ வரை இருக்கும். இதன் வீல்பேஸ் 1,345 மிமீ உடன் வெறும் 74 கிலோ மட்டுமே எடைக்கொண்டிருக்கும்.
  • குறிப்பிட்ட மாறுபாடு வாரியான விவரங்கள் மற்றும் வேறுபாடுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, ஆனால் ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட் லெவல்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவற்றில் ஒன்றாக ஓலா S1 ப்ரோ இருக்கும் என்று கூறப்படுகிறது.
  • இந்த ஓலா ஸ்கூட்டரின் பேட்டரி திறன் 3.4kWh ஆக இருக்கும், இது FAME-II மானியத்திற்கு தகுதியுடையதாக இருக்கும். அதிகாரப்பூர்வ செயல்திறன் விவரக்குறிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் வெளியான தகவல்களின்படி, ஸ்கூட்டர் 4.5 வினாடிகளில் 0 முதல் 45 கிமீ வேகத்தை எட்டும் என்றும் 100 கிமீ வேகத்தில் ஓடும் திறன் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது.
  • ஸ்கூட்டரின் விலை ஆகஸ்ட் 15 அன்று அறிவிக்கப்படும். இதன் விலை ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.30 லட்சத்திற்குள் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு.

Views: - 1014

1

1